broccoli salt and pepper recipe 21 1453362228
சைவம்

ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபி

காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ஓர் காய்கறி தான் ப்ராக்கோலி. பலரும் இந்த காய்கறியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் பலரும் இதை வாங்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு தமிழ் போல்ட்ஸ்கை ப்ராக்கோலியை எப்படி சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று கொடுத்துள்ளது.

அதுவும் ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபியை இங்கு கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி – 2 கப் (சுத்தம் செய்தது) மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் மைதா – 1 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன் பூண்டு – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் – 1/4 கப் தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுத்தம் செய்து வைத்துள்ள ப்ராக்கோலியைப் போட்டு, உப்பு சேர்த்து 1 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பௌலில் மைதா, சோள மாவு, 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, வேக வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ப்ராக்கோலியை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் மிளகுத் தூள், உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்த்து ஒருமுறை பிரட்டிவிட்டு இறக்கினால், ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெடி!!!

broccoli salt and pepper recipe 21 1453362228

Related posts

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

nathan

உருளைக்கிழங்கு மொச்சை வறுவல்

nathan

நூல்கோல் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

நிமிடத்தில் செய்யலாம் கேரட் சாதம்

nathan

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

nathan

காலிபிளவர் பொரியல்

nathan

சூப்பரான சிதம்பரம் கத்திரிக்காய் கொஸ்து

nathan