hair 05 1470396754
தலைமுடி சிகிச்சை

தேங்காய் பாலைக் கொண்டு எப்படி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்

அழகான கூந்தலை இயற்கையாகவே சிலர் பெற்றிருப்பார்கள். ஆனால் அதனை ஒழுங்காக பராமரிப்பது ஒருகலை. அழகியலில் கூந்தல் அழகும் இடம்பெற்றுள்ளதுதானே. கூந்தல் வளர்ச்சி என்பது எல்லா சமயங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. குளிர்காலத்தில் வறட்சியினால் கூந்தல் இயற்கையாகவே உதிரும்.

வெயில் காலத்தில் பிசுபிசுப்பு பொடுகு அதிகம் உண்டாகும். மழைகாலத்தில் பூஞ்சை தொற்று அரிப்பு உண்டாகும். ஆனால் இவற்றையெல்லாம் சமாளித்து உங்கள் கூந்தலுக்கு அழகு தர உங்கள் கையில்தான் அல்லது உங்கள் சமையலறையில்தான் உள்ளது. அது தேங்காய் பால்.

தேங்காப்பாலில் அதிக புரோட்டின் உள்ளது. கூடவே இரும்பு சத்தும் மெங்கனீசும் உண்டு. கூந்தல் வளர்ச்சிக்கு இது போதாதா? இவை கூந்தலை வளரச் செய்யும் என்பதை விட, கூந்தல் வளர்ச்சியை தூண்டும். பளபளக்க வைக்கும். அதைவிட மிக மென்மையான கூந்தலை தரும்.

தேவையானவை : தேங்காய் பால் – முடிக்கேற்ப முட்டை – 1 ஆலிவ் எண்ணெய் – கால் கப் தேங்காய் எண்ணெய் – கால் கப் (அ) விளக்கெண்ணெய்

முதலில் எடுக்கும் திக்கான தேங்காய்பாலில் முட்டை ஊற்றி அடித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையில் ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் குறிப்பாக ஸ்கால்ப்பில் தேய்க்கவும்.

வேர்க்கால்களிலிருந்து, நுனி வரை தேய்த்து, 45 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் தலையை வெதுவெதுப்பான நீரில் அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகித்து அலசவும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். முடிஉதிர்தல் நின்று, அடர்த்தியாகவும், மிருதுவாகவும் கூந்தல் வளர்வதை பார்ப்பீர்கள்.

hair 05 1470396754

Related posts

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயச்சாறு

nathan

அரப்புத்தூள் கூந்தல் மென்மையாக இருக்க உதவும் பயன்படுத்தும் முறை..!

nathan

நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்

nathan

வெள்ளை முடிப்பிரச்சனைக்குக்(white hair) இயற்கை வழிமுறையகள்…

nathan

பொடுகு காரணமாக முடி விழுவதை நிறுத்த இந்த ஓட்ஸ் முடி பேக்கை முயலவும்.

nathan

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் வெந்தயக்கீரை

nathan

முடி உதிர்கின்றது என்ற கவலையா? இயற்கை முறையில் உடனடித்தீர்வு!

nathan

முடிப்பிளவுகளை தடுக்கும் வழிகள்

nathan