33.3 C
Chennai
Saturday, May 18, 2024
uiPCSw2
சைவம்

கொப்பரி பப்பு புளுசு

என்னென்ன தேவை?

துவரம் பருப்பு – அரை கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
உருளைக்கிழங்கு – 1
கேரட் – 1, பீன்ஸ் – 6
வெண்டைக்காய் – 5
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
கொத்தமல்லி – 1 கொத்து.
தாளிக்க
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்து, சீரகம் – தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

எப்படி செய்வது?

வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக் கிழங்கு, வெண்டைக்காயை சிறு துண்டுகளாகவும் பச்சை மிளகாய், பீன்ஸை நீளவாக்கிலும் வெட்டிக் கொள்ளுங்கள். புளியைக் கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி, மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளுங்கள். துவரம் பருப்பை அலசி, அதோடு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 3 அல்லது 4 விசில் விட்டு இறக்கி நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும், அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து உப்பு தூவி, நன்கு கிளறுங்கள். பிறகு, அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து காய்கறிகளை நன்கு வேகவிடுங்கள். காய்கறிகள் வெந்ததும் மசித்து வைத்துள்ள பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை கலந்து தேவையான அளவு உப்பு தூவி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்குங்கள். ஆந்திர தேசத்து கொப்பரி பப்பு புளுசு ரெடி. uiPCSw2

Related posts

தேங்காய் பால் பிரியாணி

nathan

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

வரகு குடைமிளகாய் சாதம்

nathan

பிரிஞ்சி ரைஸ்

nathan

தேங்காய்ப் பால் சாதம்

nathan

சுவையான தேங்காய் பால் காய்கறி குழம்பு

nathan

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!

nathan

அப்பளக் கறி

nathan