sl4204
சிற்றுண்டி வகைகள்

பாசிப்பருப்பு டோக்ளா

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு – 1/2 கப்,
பச்சைமிளகாய் – 2,
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
கடலைமாவு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
புளிப்பு தயிர் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
ஈனோசால்ட் (பழம் உப்பு) – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

அலங்கரிக்க…

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையில் கடலை மாவு, சர்க்கரை, மீதமுள்ள தயிர், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் ஈனோசால்ட் சேர்க்கவும். ஈனோசால்ட் சேர்த்தவுடனே எண்ணெய் தடவிய தட்டில் அந்த மாவை ஊற்றி 15 நிமிடங்கள் நீராவியில் வைக்கவும். தோக்கலா வெந்தவுடன் துண்டாக வெட்டவும். பிறகு எண்ணெயை காய வைத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தும் டோக்ளா மீது சேர்க்கவும்.
sl4204

Related posts

கோதுமை ரவை கேரட் புட்டு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை ஆலு சாட்

nathan

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

கேரட் கொத்து சப்பாத்தி

nathan

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

அரைத்து செய்யும் பஜ்ஜி

nathan

நெய் அப்பம்

nathan

ஸ்நாக்ஸ்: சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட்

nathan