28.7 C
Chennai
Saturday, May 25, 2024
ld46011
ஆரோக்கியம் குறிப்புகள்

என் சமையலறையில்

டிப்ஸ்.. டிப்ஸ் …

* தோசை நன்றாக மெல்லியதாக வர வேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் பளபளவென்று சுவையான மெல்லியதான தோசை வரும்.

* பால் திரிந்துவிட்டால் திரிந்த பாலை வடிகட்டி தண்ணீரை நீக்கிவிடவும். தயிர்போல் உள்ளதைத் தனியே எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளற வேண்டும். சிறிது நேரத்தில் கீழே இறக்கி, பாத்திரத்தில் கொட்டி துண்டு போட்டால் சுவையான பால் பர்பி தயார்.

* உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

* பாயசத்தில் நீர் அதிகமாகிவிட்டால் அதில் வாழைப்பழத்தைப் பிசைந்து போட்டு, கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் தயார்.

* காராபூந்தி ஒரு பங்கு, ஓமப்பொடி ஒரு பங்கு, அவல் பொரி ஒரு பங்கு, வேர்க்கடலை கால் பங்கு, பொட்டுக் கடலை கால் பங்கு, மைதா மாவில் செய்த பிஸ்ட் ஒரு கைப்பிடி என்ற அளவில் கலந்து பொரித்த பெருங்காயத்தைப் பொடித்து, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், பொரித்த கறிவேப்பிலை, நான்கு ஸ்பூன் டால்டா ஆகியவற்றை கலந்தால் டேஸ்ட்டியான மிக்ஸர் ரெடி. ேஹாட்டல் மிக்ஸர் மாதிரியே சுவையில் அசத்தும்.

* தக்காளி, புதினா இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜி செய்தால் கலரும் சுவையும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

* மாதுளைத்தோல், சாத்துக்குடித் தோல், ஆரஞ்சுத் தோல், எலுமிச்சைத் தோல், இதில் ஏதாவது ஒன்றை பச்சரிசி நொய், பாசிப் பயறுடன் சீகைக்காயில் சேர்த்து அரைத்து தலைக்குளிக்க பேன், பொடுகு வராது. உடல் புத்துணர்ச்சி பெறும். மேனியில் பொலிவு ஏற்படும். சொறி, சிரங்கு, வேனில் கட்டி, தோல் வியாதி வராது.

* 100 கிராம் வற்றல் மிளகாய், 100 கிராம் கடலைப் பருப்பு, 100 கிராம் தனியா, 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம், 1/2 டேபிள்ஸ்பூன் மிளகு, மேற்கண்டவற்றை தனித்தனியாக வறுத்து நாட்டு சர்க்கரை 1/2 டீஸ்பூன் சேர்த்து பாட்டிலில் வைத்துக் கொண்டால் பொரியலில் தூவி இறக்கலாம். பருப்பில்லாமல் குழம்பு செய்யலாம்.

* முழு பச்சைப் பயறை முக்கால் பதமாக வறுத்து பின்னர் வேக வைத்து நீரை வடிகட்டி விட வேண்டும். பயரில் பாதி அளவு தூளாக்கிய வெல்லம் சேர்த்து 1 மூடி தேங்காய் சன்னமாக துருவியதைச் சேர்த்து, சிட்டிகை உப்பும், ஏலக்காய் பொடியும் கலந்து அடுப்பில் வைத்து சுருளக் கிளறி இறக்க வேண்டும். வாசமும் ருசியும் உள்ள முழு பச்சைப் பயறு இனிப்புச் சுண்டல் ரெடியாகிவிடும். தோலோடு இருப்பதால் பைபர் சத்தும் கிடைக்கும்.

* 6 மணி நேரம் கொள்ளுப்பயறை ஊற வைத்து தண்ணீரை வடித்து நிழலில் உலர்த்தி வறுத்து சமையல் செய்தால் சுவையாக இருக்கும்.

* கேசரி தயாரிக்கும்போது இரண்டு பேரீச்சம் பழத்தையும் பொடிதாக அரிந்து போட்டால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
ld46011

Related posts

பச்சிளம் குழந்தைகளுடன் ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்? தெரிந்துகொள்வோமா?

nathan

நீங்கள் சாப்பிட்ட உடன் இந்த விஷயத்தை செய்யும் நபரா ?அப்ப இத படிங்க!

nathan

உங்க உடல் சூட்டை குறைத்து செரிமான அமைப்பை சரி செய்ய இந்த மசாலா பொருட்கள் போதுமாம்..!தெரிந்துகொள்வோமா?

nathan

மகளுக்கு ஒவ்வொரு அம்மாவும் முக்கியமாக சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் ?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் மோசமான ஒருவரை காதலிக்கிறீங்கனு அர்த்தமாம்!

nathan

உங்க ராசிப்படி உங்களின் ஆபத்தான குணம் என்ன தெரியுமா?

nathan

காலையில் எழுந்ததும் மெயில், இணையம் பார்ப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

எலுமிச்சை சாறில் இதை சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தையின்மை பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு இயற்கை வைத்திய டிப்ஸ்!!

nathan