27.3 C
Chennai
Sunday, May 19, 2024
p52
ஆரோக்கிய உணவு

ஆப்பிளுக்கு ஈடான சத்து கொய்யாவில்..

ஆப்பிள், கொய்யா இரண்டு பழங்களுமே அதிக நேரம் நம் வயிற்றில் தங்கி, நமக்குத் தேவைப்படும் சக்தியை சரியான அளவில் கொடுக்கும். அதிக விலை என்பதால், ஆப்பிள் பழத்தில்தான் அதிக சத்துக்கள் இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். குளிரூட்டப்பட்ட கடைகளில் அதிக விலையில் கிடைக்கும் ஆப்பிளின் சத்துக்களை, தெருவோரப் பாட்டியிடம் வாங்கும் கொய்யாவில் இருந்தும் நாம் எடுத்துக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆப்பிள்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க, ரசாயனங்கள் தடவப்பட்டுவருகிறது. கொய்யா உள்ளூரிலேயே கிடைக்கும் என்பதால், இந்த அபாயத்தில் இருந்தும் தப்பித்து விடலாம்.

p52

ஆப்பிள்

ஒரு நாளுக்கு ஓர் ஆப்பிள் சாப்பிடும்போது அதில் உள்ள வைட்டமின், நார்ச்சத்து, புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள் போன்றவற்றை வரவிடாது.

எச்சில் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. இதனால் வாயில் பாக்டீரியா உற்பத்தி தடுக்கப்படுவதால், பல் மற்றும் வாயின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

இந்தப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் அல்சைமர் என்ற மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் மூளையில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் உற்பத்தியை அதிகரித்து, மறதி நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆப்பிளில் இருக்கும் ஃப்ளவனாய்டு (Flavonoids) கணையப் புற்றுநோய்க்கான வாய்ப்பையும் டிரிடர்பெனாய்ட்ஸ் (Triterpenoids) மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

ஆப்பிளில் உள்ள பெக்டின் (Pectin) சத்து, நரம்புகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும். ரிபோஃப்ளோவின் (Riboflavin) ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

p52a
கொய்யா

ஆப்பிளைக் காட்டிலும் கொய்யாவில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதை ஏழைகளின் ஆப்பிள் எனலாம்.

கொய்யாவில் இருக்கும் வைட்டமின் சி நம் தோலை ஈரப்பதமாகவும், பற்களை வலுவாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கொய்யாவில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட், நாம் சுவாசிக்கும் மாசடைந்த காற்றின் மூலம் உடலுக்குள் பரவும் நச்சுத்தன்மையை வெளியேற்றும்.

கொய்யாப்பழம் சாப்பிட்டால் ஜலதோஷம் வரும் என்று சொல்வார்கள். இது தவறு. ஜலதோஷப் பிரச்னை உள்ளவர்கள், சுவாச பிரச்னையுள்ளவர்கள் கொய்யா எடுத்துக்கொண்டால், உடனடியாகத் தீர்வு கிடைக்கும்.

நாம் எடுத்துக்கொள்ளும் ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் கூல் டிரிங்ஸில் விஷத்தன்மை அதிகம். கொய்யாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் அந்த விஷத்தன்மை நம்மைப் பாதிக்காமல் தப்பலாம்.

தினமும் சாப்பிட்டுவர, தேவையற்றக் கொழுப்பு வெளியேறி, உடல் எடையைக் குறைக்கும்.

கொய்யாவில் உள்ள குவெர்சிடின் (Quercetin) என்ற ரசாயனம் செல்களைப் பழுதடையவிடாது. இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் கொய்யாப் பழம் அல்லது அதன் இலைகளை எடுத்துக்கொண்டால். அதிலிருக்கும் கரோட்டினாய்டு (Carotenoid) சத்து வயிற்றுப்போக்கை நிறுத்திவிடும்.

கொய்யா விதைகள் நம் குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும், கிருமி நாசினியாக செயல்படும்.

சர்க்கரையின் அளவைக் கொய்யாப்பழம் அதிகரிக்கவிடாது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கொய்யா எடுத்துகொள்வது நல்லது.

Related posts

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

nathan

பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?

nathan

கொய்யாவில் மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளது !!

nathan

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரியாணி சாப்பிடுவதில் உள்ள சாதக, பாதகங்கள்

nathan

சுவையானபலாப்பழ ரெசிபி

nathan

உங்களுக்கு தெரியுமா? தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

நீங்கள் காரம்ன்னு பச்சை மிளகாயை ஓரமா ஒதுக்கறீங்களா? அப்ப இத படிங்க!

nathan

ஓட்ஸை எப்படி உப்புமா போன்று செய்து சாப்பிடுவது?

nathan

கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan