30.8 C
Chennai
Thursday, May 30, 2024
1485779402 3696
சூப் வகைகள்

சுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி….?

தேவையான பொருட்கள்:

நண்டு – அரை கிலோ
வெங்காயத் தாள் – 3
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு துண்டு
மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி
கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி
அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை
பால் – கால் கப்
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும்.

* பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும். நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கி வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

* வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும். சுவையான நண்டு சூப் தயார்.1485779402 3696

Related posts

சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

சூப்பரான இறால் – காய்கறி சூப்

nathan

ஓட்ஸ் தக்காளி சூப்

nathan

மைன்ஸ்ட்ரோன் சூப் (இத்தாலி)

nathan

கேரட், சோயா சூப்

nathan

ஓட்ஸ் சூப்

nathan

பசியை தூண்டும் சீரகம் – தனியா சூப்

nathan

காலிஃளவர் சூப்

nathan

இறால் சூப்

nathan