201702101021232614 how to make ragi kolukattai SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ராகி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இப்போது ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :

ராகி மாவு – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கையளவு
துருவிய தேங்காய் – 1/4 கப்
பொடித்த வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை :

* பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ராகி கொழுக்கட்டை ரெடி!!!201702101021232614 how to make ragi kolukattai SECVPF

Related posts

சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் பனீர் குல்சா எப்படி வீட்டில் தயாரிக்கலாம்??

nathan

சுவையான பன்னீர் பிரட் பால்ஸ்

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

nathan

இட்லி

nathan

சூப்பரான கோதுமை ரவை டோக்ளா

nathan

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

nathan

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

வீட்டிலேயே பீட்சா…!

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan