39.4 C
Chennai
Tuesday, May 28, 2024
201703210828319994 using public wifi problems SECVPF
மருத்துவ குறிப்பு

பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்…

பொது ‘வை-பை’யில் இணைந்தால் உங்கள் போனில் ‘லாக்அவுட்’ செய்யப்படாமல் வைத்திருக்கும் மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.

பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்…
நம்மில் பலரும், பொது இடங்களில் ‘வை-பை’ (WiFi) வசதி கிடைக்கிறதா என்று ஆர்வத்துடன் பார்க்கிறோம், அது கிடைத்தால் சந்தோஷத்துடன் பயன்படுத்தத் தொடங்குகிறோம்.

ஆனால் பொது ‘வை-பை’ வசதியைப் பயன்படுத்துவதில் கொஞ்சம் கவனம் வேண்டும்.

காரணம், பொது இடங்களில் கிடைக்கும் ‘வை-பை’யை பயன்படுத்தும்போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இதனால் நமது செல்போனில் உள்ள படங்கள், வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள் திருடிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் ‘வை-பை’ பாதுகாப்பானது என்றால் அதில் ‘பாஸ்வேர்டு’ போன்ற தகவல்கள் கேட்கப்படும்.

‘பாஸ்வேர்டு’ பயன்படுத்தும்போது செய்திகள், பாதுகாப்பான மறைக்கப்பட்ட (Encrypted) தகவல்களாக இருக்கும்.

WPA அல்லது WPA2 Password கேட்கவில்லை என்றால், பாதுகாப்பில்லை என்று அர்த்தம்.

நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் பாதுகாப்பானதாக இருந்தால் அதன் முகவரியில் (URL Address) https எனக் காட்டும்.

அதற்கு நாம் பயன்படுத்தும் செல்போனை சரியான கால இடைவெளிகளில் அப்டேட் செய்ய வேண்டும். அதன் மூலம், தகவல்களைத் திருடுவது கடினமாகும்.

பொது இடங்களில் ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் வங்கிக் கணக்குகள் திருடப்படுவதைத் தடுக்கலாம்.

பொது இடங்களில் வை-பை பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால் VPN (Virtual Private Network) இணைப்பைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் நம்முடைய தகவல்கள் Encry ption செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.

பொது ‘வை-பை’யை தேவையற்றபோது தவிர்க்கலாம். ஒருவேளை நீங்கள் பொது ‘வை-பை’யில் இணைந்தால் உங்கள் போனில் ‘லாக்அவுட்’ செய்யப்படாமல் வைத்திருக்கும் மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.201703210828319994 using public wifi problems SECVPF

Related posts

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை தீவிரமாக இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

மூட்டு வலி அதிகமாகுதா? திராட்சை ஜூஸ் குடிங்க!

nathan

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தம் தெடர்பான பிரச்சினைகளை எளிய முறையில் போக்க இதோ சில மருத்துவ குறிப்புகள்

nathan

மூலநோய் வராமல் தடுப்பது எப்படி?

nathan

பரிசுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்

nathan

முழங்கால் மூட்டுகளில் உள்ள தசைநாண்களை வலிமைப்படுத்த சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா?அப்ப இத படிங்க!

nathan

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது என்ன வியாதி?

nathan