32.5 C
Chennai
Sunday, May 19, 2024
201703221047323420 kerala special kulukki sarbath SECVPF
பழரச வகைகள்

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்

கேரளாவில் கோழிக்கோடு, எர்ணாக்குளம், கொச்சி போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது குலுக்கி சர்பத். இந்த பானம் கோடைக்காலத்திற்கு ஏற்ற ஓர் அற்புத பானம்.

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்
தேவையான பொருட்கள் :

சப்ஜா விதை – 2 டீஸ்பூன்
எலுமிச்சை – 2
இஞ்சி ஜூஸ் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சோடா – 2 கப்
தேன் – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – சிறிது

செய்முறை :

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சப்ஜா விதையை சிறிது நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி விட்டு சப்ஜா விதைகளை தனியாக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு ஷேக்கரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, பச்சை மிளகாய், சோடா, தேன் சேர்த்து 30 நொடிகள் நன்கு குலுக்கி, பின் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும்.

* கோடை வெயிலுக்கு இதம் தரும் குலுக்கி சர்பத் ரெடி.

குறிப்பு :

தேன் பிடிக்காதவர்கள் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். 201703221047323420 kerala special kulukki sarbath SECVPF

Related posts

மாம்பழ லஸ்ஸி

nathan

வைட்டமின் காக்டெய்ல்

nathan

சத்து நிறைந்த பைனாப்பிள் – புதினா ஜூஸ்

nathan

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

nathan

இந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன…..

sangika

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி!

nathan

மாம்பழ பிர்னி

nathan

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

nathan

குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி

nathan