30.5 C
Chennai
Friday, May 17, 2024
1496209713 7518
அசைவ வகைகள்

கடாய் காளான் மசாலா செய்வது எவ்வாறு…?

தேவையான பொருட்கள்:

காளான் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 2
காப்ஸிகம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
தக்காளி – 3
ஏலக்காய் – 1
பிரிஞ்சி இலை – 2
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மிளகு – 10
தனியாத்தூள் 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை 2 டீ ஸ்பூன்

செய்முறை:

வெங்காயத்தில் ஒன்றை உரித்தும், ஒன்றை வெட்டியும் வைத்துக் கொள்ளுங்கள் கடாயில் ஏலக்காய், பிரிஞ்சி இலை, வர மிளகாய், சீரகம், மிளகு, சேர்த்து வதக்கவும், ஆறியதும் அரைத்து வைத்து கொள்ளவும்.

அதே கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காப்ஸிகம் மற்றும் உரித்து வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், முக்கால் பதத்தில் பூண்டு, இஞ்சி விழுது வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பொன்நிறமான பின் எடுத்து வைத்த மசாலா பொருட்களை சேர்க்கவும், தக்காளியை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கிளறவும் தேவையான அளவு உப்பு, தனியாத்தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்,

இப்போது கடாயை திறந்து பிரிஞ்சி இலையை மட்டும் நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும், அரைத்து எடுத்த விழுதை அதே கடாயில் 1 டீ ஸ்பூன் நெய் ஊற்றி, சூடானதும் அதில் சிறிதளவு நீர் சேர்க்கவும் 3 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும், அடிபிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு காளான்களை சேர்த்து ½ கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒருமுறை உப்பை, வெண்ணையை சேர்த்து 5 நிமிடங்கள் வரை கடாயை மூடி விடுங்கள், இப்போது இறக்கி கொத்தமல்லி தூவி சுவையான கடாய் காளான் மசாலா தயார்.1496209713 7518

Related posts

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan

சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்

nathan

நண்டு ஃப்ரை

nathan

நண்டு குழம்பு

nathan

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

nathan

சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு

nathan

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

nathan

சுவையான கோழி கட்லட் இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

மசாலா மீன் ப்ரை

nathan