39.4 C
Chennai
Tuesday, May 28, 2024
wait 21 1500619944 1
எடை குறைய

உடல் எடையை குறைக்க கலோரிகளை எப்படி எரிப்பது என்பதற்கான சில டிப்ஸ்

உங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் தினமும் உணவு கலோரிகளை கணக்கிடுதல், கடுமையான உடற்பயிற்சி, உணவு மற்றும் சுயக் கட்டுப்பாட்டு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதையெல்லாம் நிறைய மக்கள் செய்தும் உடல் எடை அவர்கள் எதிர்பார்த்த அளவு குறைவதில்லை. காரணம் அவர்களின் உடல் மெட்டபாலிசம் அல்லது உடலில் உள்ள வேறு பிரச்சினைகள் எடை குறைப்பதை தடுத்து விடுகின்றன.

இதனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. நீண்ட நாட்கள் எடையில் எந்த வித மாற்றமும் தெரியாமல் கஷ்டப்படுகின்றனர். அதற்காகத்தான் இக்கட்டுரையில் சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றினால் கண்டிப்பாக மாற்றம் கிடைக்கும்.

அதிகமான உடல் எடை உங்களை மற்றவர்கள் முன்னிலையில் கேளிக்கைக்கு ஆளாக்குவதை விட உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகளையும் கொண்டு வந்து விடும். அதிகமான உடல் எடையால் உடல் பருமன், மூட்டு வலி, சீரணக் கோளாறு, இதய நோய்கள், அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

நிறைய பேருக்கு தங்கள் உடல் எடை அதிகமாக காரணம் அவர்களது கெட்ட உணவுப் பழக்கம், பரம்பரை, ஹார்மோன் சமநிலையின்மை, தவறான பழக்க வழக்கங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள், மெதுவான மெட்டா பாலிசம் ஆகியவை காரணங்களாக உள்ளன.

உடல் எடையை குறைப்பதற்கு முன்னாடி அது தவறான உணவுப் பழக்கம் போன்ற எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டும்.

மெதுவான மெட்ட பாலிசத்தால் கொழுப்பு உடலிலே தங்கி உடல் எடையை அதிகரிக்கிறது. எனவே இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ் உங்கள் மெட்டா பாலிச வேகத்தை அதிகரித்து கொழுப்புகளை முழுமையாக கரைத்து விடுகிறது.

டிப்ஸ் 1: அளவு குறைந்த சமநிலை உணவுகள் : முதலில் உடல் எடையை குறைப்பதற்காக பட்டினி கிடப்பதை விட்டு விடுங்கள். இது உங்கள் மெட்டா பாலிசத்தின் வேகத்தை குறைத்து கொழுப்பை உடலிலே தங்க வைத்து விடும். அதற்கு பதிலாக குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் உடல் மெட்டா பாலிசம் அதிகரித்து கொழுப்புகளை முழுமையாக கரைத்து விடும். இதனால் உங்கள் உடல் எடையும் குறையும்.

டிப்ஸ் 2:உடற்பயிற்சி நிறைய தகவல்கள் எடை தூக்கும் பயிற்சி உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த உடற்பயிற்சி என்று சொல்கிறது. இதனால் உங்கள் மெட்டபாலிசம் விரைவாக அதிகரிக்குமாம். எனவே இந்த எடை தூக்கும் பயிற்சி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் எடையை குறைப்பதற்கான அற்புதமான பயிற்சியாகும்.

டிப்ஸ் 3: புரோட்டீன்கள் நிறைந்த உணவுகள் உடல் எடையை குறைக்க உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது மிகவும் முக்கியம். புரோட்டீன்கள் நிறைந்த உணவுகள் உங்கள் மெட்ட பாலிசத்தை ஆரோக்கியமாக ஆக்குகிறது. பால், சிக்கன், வாழைப்பழம், கீரைகள், முட்டை, சீஸ் மற்றும் கொண்டைக்கடலை போன்ற புரோட்டீன் உணவுகள் உங்கள் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது.

டிப்ஸ் 4: மனஅழுத்த அளவை அறிதல் உங்கள் மன அழுத்தம் உங்கள் மெட்ட பாலிசத்தின் வேகத்தை குறைத்து விடும். இதனால் கொழுப்புகளை கரைப்பதற்கான போதுமான சக்தி இல்லாமல் கொழுப்புகள் கரைவதில்லை. எனவே எப்பொழுதும் மனதை ரிலாக்ஸாக வைத்து மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்த அளவு உடல் எடையை குறைக்கலாம்.

wait 21 1500619944

Related posts

உங்களுடைய நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்

nathan

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்

nathan

உடலின் உள்ள கொழுப்பை குறைக்கும் தனியா பொடி

nathan

வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் ஜூஸ்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் கொழுப்பு கரைய – முட்டைகோஸ் சூப்:!

nathan

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க.

nathan

உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும்!…

sangika

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்..!!

nathan

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் திரவ டயட்!! இதப் பத்தி தெரிஞ்சுக்கோங்க!!

nathan