39.4 C
Chennai
Tuesday, May 28, 2024
39499
ஆரோக்கியம்யோக பயிற்சிகள்

யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்கள்…

இனி யோகா செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, நீங்கள் யோகா வகுப்பில் சேர்ந்துவிட்டால், தொடர்ந்து நீங்கள் யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்களை, விதிகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யோகா அறையில் நுழையும் முன்பு (Before entering the yoga room)

யோகா அறையை ஜிம் போன்று நினைத்துக்கொள்ளக் கூடாது:

உடல் கட்டுமானத்தைப் பராமரிக்கவும் யோகா உதவுகிறது. ஆனாலும் அதனை ஜிம் அல்லது பிற உடற்பயிற்சி மையங்களுடன் ஒப்பிட முடியாது.

அதாவது வேடிக்கையாக, ஆரவாரத்துடன் உள்ளே நுழைவது தேவையற்றது. உள்ளே நுழையும் முன்பு உங்கள் மொபைலை அணைத்துவிடவும் அல்லது சைலன்ட் மோடில் வைத்துவிடவும். காலணிகளை வெளியே விடவும்.

39499

அறையில் நுழைந்த பிறகு (After entering the yoga room)

விசாலமாக இருக்கும் இடத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்:

வகுப்புக்குள் நுழைந்ததும், அமைதியாக மேட்டை விரித்து நெருக்கமற்ற ஓர் இடத்தைத் தேர்வு செய்து அங்கே அமரவும். உங்களுக்கும் அக்கம்பக்கம் இருக்கும் பிறருக்கும் இடையே ஒருவர் செல்லுமளவிற்கு இடைவெளி இருக்க வேண்டும்.

போட்டி போடக்கூடாது:

உங்கள் பயிற்சியில் கவனம் செலுத்துங்கள், பிறர் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்காதீர்கள். ஏனெனில் யோகா வகுப்புகளில், புதிதாக யோகா கற்றுக்கொள்ள வந்த பலரும் இருப்பார்கள், பல ஆண்டு அனுபவமிக்கவர்களும் இருப்பார்கள்.

அவர்களைப் பார்த்து, நீங்களும் அதே போல ஏதேனும் செய்ய முயற்சி செய்தால் தவறாகிப்போகலாம். அதேபோல், நன்றாகச் செய்ய முடியாத சிலரை விட நன்றாகச் செய்துகாட்டுகிறேன் பார் என்ற மனப்பான்மையிலும் செய்யக்கூடாது.

நண்பர்கள் வேண்டாம்:

இது கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றலாம். அருகில் நண்பர்கள் இருந்தால் இரண்டு விஷயங்கள் நடக்க சாத்தியமுள்ளது.

பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றும் ஏதேனும் ஆசனங்களை செய்ய முயற்சி செய்யும்போது, நண்பர்களின் முன்னால் செய்ய உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம்.

அல்லது உங்களில் ஒருவர் தவறு செய்யும்போது மற்றொருவர் பார்த்து சிரித்துவிட வாய்ப்புள்ளது.

ஓரிரு மணி நேரம் தான் யோகா வகுப்பு! ஆகவே, நண்பர்கள் இல்லாமல் தனியாக பயிற்சி செய்வதே நல்லது. அது உங்கள் கவனம் சிதறாமல் இருக்க உதவும். வகுப்பு முடிந்த பிறகு உங்கள் நண்பர்களை சந்தித்து நேரம் செலவழித்துக்கொள்ளலாம்!

யோகா அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் (Before leaving the yoga room)

நீங்கள் பயிற்சி செய்த இடத்தை அலங்கோலமாக விட்டுச் செல்லக்கூடாது: யோகாவில் தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்வதும், மனதையும் சுத்தப்படுத்துவதும் மிக முக்கியம்.

ஆகவே, நீங்கள் இருக்கின்ற இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதே இதன் முதல் படி.

நீங்கள் வரும் முன்பு எப்படி இருந்ததோ அதே போல் அழகாக வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். டிஷூ போன்றவற்றைப் பயன்படுத்தியிருந்தால் அவற்றை குப்பைத் தொட்டியில் இடவும்.

அமைதி:

எப்படி அமைதியாக உள்ளே வந்தீர்களோ அதே போல் அமைதியாக வெளியேறுங்கள். யோகா என்பது மனதையும் உடலையும் அமைதிப்படுத்துவது. உடலும் மனமும் அமைதியடையவும் அந்த அமைதி சிறிது நேரம் நீடிக்கவும் அவகாசம் கொடுங்கள்.

வகுப்பை விட்டு வெளியே வந்ததுமே கலகலவென்று அரட்டை அடித்தால் நீங்கள் பயிற்சி செய்து பெற்ற மன அமைதி சிதறிப்போய்விடும்!

யோகா வகுப்புக்குச் செல்வது தொடர்பான முக்கியமான விதிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள்! இனி யோகா செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து மகிழுங்கள்!

Related posts

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

சின்ன பழக்கம்-பெரிய விளைவு..!

sangika

டிப்ஸ்.. சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய….!!

nathan

செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!

nathan

பெண்களே உள்ளாடை, ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

nathan

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

உடற்பயிற்சி கூடத்தில் மக்கள் செய்யும் முதல் 5 தவறுகள்

nathan