30.5 C
Chennai
Friday, May 17, 2024
tomato chose
அறுசுவைஜாம் வகைகள்

மிகவும் சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே!…..

தேவையான பொருட்கள்

தக்காளி – ஒரு கிலோ
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 3 பல்
பட்டை – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

tomato chose

செய்முறை:

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நல்ல கெட்டியான தக்காளியாக வாங்கிக் கொள்ளவும். அப்போதுதான் சாஸ் கெட்டியாக நன்றாக இருக்கும். பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து அடுப்பை மூடி 2 விசில் சத்தம் வரை வேக விடவும். வெந்தவுடன் அடுப்பை திறந்து தக்காளியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

இதை ஒரு பெரிய கண் உள்ள வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறவும். சாஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அதாவது, நீர்க்க இருக்கக் கூடாது. இதுவே பதம்,

இந்த பதம் வந்தவுடன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி ஜாடியில் ஊற்றி மூடி வைக்கவும். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். மிகவும் சுவையான தக்காளி சாஸ் தயார்.

Related posts

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

இது வேற லெவல்!? ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி..

nathan

சூப்பரான கரும்புச்சாறு பொங்கல்!….

sangika

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

மைசூர் பாக்

nathan

வரகு அரிசி புளியோதரை

nathan

பத்தியக் குழம்பு செய்முறை!

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

சீஸ் போண்டா

nathan