உடல் பயிற்சி

முதுகுத்தண்டை வலுவாகும் சிங்கிள் லெக் பயிற்சி

முதுகுத்தண்டை வலுவாகும் சிங்கிள் லெக் பயிற்சி

காலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை.  வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.முதுகுத்தண்டை வலிமையாக்க பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும்.

இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும். இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரிக்கவும்.

இந்த பயிற்சி ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். பலன்கள்: வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.

 

Related posts

இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்யவேண்டாம்

nathan

தினசரி உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

nathan

மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!…

sangika

இந்த முத்திரையை செய்வதால் முறையற்ற சுவாசம் சரியாகும்…….

sangika

மனதை ஒருநிலைப்படுத்தும் விருச்சாசனம்

nathan

நடைப்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

nathan

பெண்களின் தோள்பட்டை, கைகளுக்கான பயிற்சி

nathan

ஏரோபிக்ஸ் பயிற்சியின் போது கவனம் தேவை

nathan

இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம்

nathan