33.3 C
Chennai
Saturday, May 18, 2024
cover 1 1
கர்ப்பிணி பெண்களுக்கு

தெரிஞ்சிக்கங்க… கர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா ?

கர்ப்ப காலங்களில் பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் தான். ஆனால் எந்த பழம் எந்த அளவு எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது.

பெண்கள் அதிகமாக விரும்பி உண்ணும் பழங்களில் மாம்பழத்திற்கு அடுத்தடுத்த இடங்களில் நிச்சயம் கொய்யா இருக்கும். ஆனால் கர்ப்பகாலத்தில் கொய்யாவை உண்ணாலாமா என்கிற சந்தேகம் இருந்தால் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.

கொய்யா

மாங்காய்க்கு பிறகு கொய்யாதான் காய் பழம் என இரண்டு விதத்திலும் உண்ணக்கூடிய ஒன்றாகும். காயாக இருக்கும் போது வெளிப்புறம் பச்சைக் கலரிலும், கனிந்த பிறகு மஞ்சள் நிறத்திலும் காட்சியளிக்கும். மேலும் இது ஜாம், ஜெல்லி, போன்று நீண்ட நாட்களுக்கு தாங்கும் உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது

கார்போஹைட்ரேட்

கொய்யா தன்னுள்ளே எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக தண்ணீர் சத்து, குறைந்த கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட்களைக் கொண்டுள்ளது. தினந்தோறும் கார்போஹைட்ரேட்டை அதிகமாக உட்கொள்வதற்கு பதிலாக கொய்யா அந்த இடத்தை பூர்த்தி செய்கிறது.

கர்ப்பகால பெண்களுக்கு பாதுகாப்பா ?

கொய்யா உண்பதால் பக்கவிளைவுகள் குறைவாகும். இதனால் கர்ப்ப காலத்தில் பயப்படாமல் கொய்யாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முன்பு உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றி வந்தீர்கள் என்றால் மருத்துவ ஆலோசனையின் பேரில் இதையும் சேர்த்துக் கொள்ளவும்.

கர்ப்பகால சர்க்கரை நோய்

கொய்யாக்களை உண்ணும் போது உடலில் உள்ள சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து கொய்யா விடுதலை அளிக்கிறது.

குறை பிரசவம்

கொய்யா உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கிறது. இதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கருக்கலைப்பு, அல்லது குறை பிரசவம் போன்றவற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.

இரத்த சோகை

கொய்யாக்கள் ஹீமோகுளோபின்களை அதிகரிக்கப் பயன்படுகிறது. இதனால் கர்ப்பகால பெண்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் தற்காத்துக் கொள்கிறது. முன்பாகவே இரத்த சோகை இருக்குமாயின் கர்ப்பகாலத்தில் கொய்யாக்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

எல்லா வலிகளுக்கும் ஒரே மருந்து

கொய்யாவில் உள்ள வைட்டமின் பி சத்துகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் கர்ப்பகாலத்தில் பொதுவாகக் காணப்படும் வழிகளான பல்வை, அல்சர், இரத்த நாளங்கள் உடைப்பு, ஈறுகளில் இரத்தப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் ஒற்றை மருந்தாக கொய்யா இருக்கிறது.

மலச்சிக்கல்

கர்ப்பகாலத்தில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது மலச்சிக்கல். செரிமானம் தொடர்பான அத்துனை பிரச்சினைகளை கொய்யா தீர்த்து வைக்கிறது. மேலும் மலம் இயல்பாக கழிப்பதற்கு பேருதவி புரிகிறது.

கிருமிகள்

கொய்யாவில் உள்ள ஆண்டி ஆக்சிடன்கள் மற்றும் டாக்சின்கள் கிருமிகள் மற்றுகள் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுகின்றன. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ போன்றவை கர்ப்பகால பெண்களுக்கு நோய்த் தாக்குதலை கிட்ட கூட நெருங்கவிடாமல் பாதுகாக்கின்றன.

மரபணு மாற்றம்

கொய்யாக்களை அதன் விதைகளுடன் உண்ணும் போது தான் மலச்சிக்கலிலிருந்து விடுதலை அளிக்கிறது. எனவே மரபணுமாற்றம் செய்த கொய்யாக்களை அறவே பயன்படுத்தாதீர்கள்2 15651

நரம்பு மற்றும் தசை

கொய்யாவிலுள்ள மெக்னீசியம் உடலின் தசை மற்றும் நரம்புகளுக்கு ஓய்வை அளிக்கிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் எடை கூடுதலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட இது மிகவும் அவசியமாகிறது.

குழந்தையின் நரம்பு மண்டலம்

கொய்யாவிலுள்ள வைட்டமின் பி-9 மற்றும் போலிக் அமிலங்கள் குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. . மேலும் கொய்யாவிலுள்ள கால்சியம் கர்ப்பகால உணவுக் கட்டுப்பாட்டில் மிக முக்கியமானது.

Related posts

கர்ப்ப கால 10 நம்பிக்கைகள்

nathan

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது

nathan

குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன தெரியுமா?…

sangika

தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்குழாய் கர்ப்பம்

nathan

வலி நீக்கும் ஹிப்னோபெர்த்திங் பிரசவம்!

nathan

தாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி

nathan

சிசேரியன் செய்த பெண்கள் கவனத்திற்கு

nathan

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு…

nathan

கர்ப்ப காலத்திலும் மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம் – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan