30.6 C
Chennai
Saturday, May 18, 2024
can you boost your immune system
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… நோய் எதிர்ப்பாற்றல் குறைவது ஏன்? அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக நம்மிடம் நோய் எதிர்பாற்றல் இயற்கையாக காணப்படும் ஒரு அதி சக்தியாகும்.

ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் எதிர்ப்பு சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும் போது நோய் எதிர்ப்பாற்றல் எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்த சக்தி நாளடைவில் பல காரணங்களால் குறையும்.

அந்தவகையில் அந்த ஏன் குறைகின்றது? இதனை தடுக்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.

நோய் எதிர்ப்பாற்றல் என்பது என்ன?

உடலில் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சினையை நம் உடலே எதிர்த்துப் போராடும் ஆற்றல் தருவதற்கு உடலில் ‘தற்காப்பு மண்டலம்’ (Immune system) இருக்கிறது. ரத்தமும் நிணநீரும் இணைந்துள்ள மண்டலம் இது.

இவை தரும் போராட்ட ஆற்றலைத்தான் ‘நோய் எதிர்ப்பாற்றல்’ (Immunity) என்கிறோம்.

நோய் எதிர்ப்பாற்றல் எப்படிக் குறைகிறது?
  • ஊட்டச்சத்துக் குறைவது
  • புகைபிடிப்பதும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதும்
  • துரித உணவுப்பழக்கம்
  • உடற்பருமன்
  • உறக்கம் குறைவு
  • உடற்பயிற்சிக் குறைவு
  • மன அழுத்தம்

இவை போன்றவையும் உடலில் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைத்துவிடுகின்றன.

யாருக்கு அதிகம் ஏற்படுகின்றது?
  • மாசடைந்த சூழலிலும், மக்கள் நெருக்கமான இடங்களிலும் வசிப்பவர்கள், கதிரியக்கம் அதிகம் வெளிப்படும் பணிகளில் உள்ளவர்கள் ஆகியோருக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.
  • அடிக்கடி நோய்த்தொற்றுகளால் அவதிப்படுபவர்களுக்கும் மருந்து, மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவோருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது.
  • சரியான வயதில் முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறுபவர்களுக்கும் இதே பிரச்சினை ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்பதைக் காட்டும் அறிகுறி என்ன?
  • உடலில் சோர்வு ஏற்படும்.
  • மாதாமாதம் சளி
  • ஜலதோஷம்
  • காய்ச்சல்
  • ஒவ்வாமை ஏற்பட்டால்
  • காயங்கள் ஆறத் தாமதல்
  • வயதுக்கு ஏற்ற எடை இல்லாதது
  • அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண்
  • சிறுநீரகத் தொற்று
  • பசிக்குறைவு
  • செரிமானக்கோளாறு
  • வயிற்றுப்போக்கு
நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
  • கர்ப்பிணிக்குக் கர்ப்பகாலக் கவனிப்பு உரிய வகையில் இருக்க வேண்டும்.
  • குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் தர வேண்டும்.
  • எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவை உண்ண வேண்டும்.
  • சிறுதானிய உணவு, பருப்பு, இனிப்பு, கொழுப்பு உணவைத் தேவைக்குச் சாப்பிட வேண்டும். முளைகட்டிய தானியங்கள் உதவும்.
  • தினமும் ஒரு வண்ணத்தில் ஒரு காய் (கரட், முட்டைக்கோஸ்), ஒரு பழம் (ஆப்பிள், ஆரஞ்சு), ஒரு கீரை (முருங்கை, அகத்தி) மிக அவசியம்.
  • வெள்ளைச் சர்க்கரையைவிட நாட்டுச்சர்க்கரை, வெல்லம், தேன், கருப்பட்டி போன்றவை நல்லவை.
  • பால், மோர், தயிர், நெய், வெண்ணெய், காளான், மீன், காய்கறி சூப், அசைவ சூப்புகள் உதவும்.
  • பருப்புகளில் உளுந்தும் கொட்டைகளில் பாதாமும் அதிகம் உதவும்.
  • வெங்காயம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள், சீரகம், கருஞ்சீரகம், ஏலக்காய், கொத்தமல்லி போன்றவற்றைத் தினசரி உணவுத் தயாரிப்புகளில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
  • இறைச்சி, முட்டை அளவோடு இருக்கட்டும்.
  • கேக், பன், ரொட்டி, நூடுல்ஸ், பரோட்டா, சிப்ஸ், சாக்லேட், குளிர்பானங்கள், காற்று ஏற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • தினமும் 3 லிட்டர் தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.
  • தினமும் 6-8 மணி நேர உறக்கம் அவசியம்.
  • ஏதேனும் ஓர் உடற்பயிற்சியிலோ விளையாட்டிலோ ஈடுபடுவது நல்லது. நாள்தோறும் அரை மணி நேரம் உடலில் வெயில் பட வேண்டும்.
  • காலை நேர நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, யோகா போன்றவையும் உதவும்.
  • உடற்பருமன் அடைவதைத் தவிர்க்க வேண்டும்.
  • மதுவை மறக்க வேண்டும்; புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
  • மனக்கவலை, மன அழுத்தம் கூடாது.
  • மாசில்லாமல் இருக்கும் சுற்றுச்சூழலில் வசிப்பது முக்கியம்.
  • வயதுக்கு ஏற்ற தடுப்பூசிகள் அவசியம் போடப்பட வேண்டும்.
  • நீரிழிவு, ஒவ்வாமை போன்ற நாட்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுத்தம் வேண்டும்; சுய மருத்துவம் வேண்டாம்.

Related posts

மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் சாப்பிடக்கூடாத மாத்திரைகள்!!!

nathan

அலுவலக பணிகளில் பெண்களின் பங்கு

nathan

மனநல பாதிப்பை போக்கும் மருதாணிப்பூ!

nathan

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கனுமா?

nathan

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி என்ன?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தும் கரு தங்குவதில்லையா.?

nathan

அதிகாலைச் சூரியனை இப்படியும் ‘வெல்கம்’ பண்ணலாம் பெண்களே!

nathan

உங்களுக்கு தெரியுமா அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி எதனால் வருகிறது?

nathan

முதியோர் வெயில் காலத்தில் சிறுநீரக பிரச்சனையை தவிர்க்க

nathan