33.3 C
Chennai
Saturday, May 18, 2024
hgghj
அறுசுவைஐஸ்க்ரீம் வகைகள்

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக மாம்பழ குச்சி ஐஸ் செய்து பாருங்கள்.

என்னென்ன தேவை?
பால் – அரை லிட்டர்,
அரிசி மாவு – 2 டீ ஸ்பூன்,
சீனி – 100 கிராம்,
பாதாம் – சிறிது
முந்திரி – சிறிது
மாம்பழம் – 1
hgghj

எப்படி செய்வது? பாலை நன்கு வற்ற காய்ச்சவும். அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆறவிடவும்.

இதற்கிடையே மாம்பழத்தை தோல் சீவி நீளநீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். பால் அரிசி மாவு கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும். பின்னர் இதை குல்பி அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும். குல்பி அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம். மாம்பழ குல்பி உறைந்ததும் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான மாம்பழ குச்சி ஐஸ் ரெடி.!
dffjhhgg

Related posts

சுவையான முட்டை மிளகு மசாலா

sangika

பனீர் ஃப்ரைடு ரைஸ் செய்முறை

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

சுவையான இஞ்சி சட்னி!….

sangika

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

பூண்டு நூடுல்ஸ்

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்

nathan

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!

nathan