சரும பராமரிப்பு

சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துபவரா நீங்கள்

காற்றில் படர்ந்திருக்கும் மாசுப்படிந்த தூசு, வெயிலின் தாக்கம் போன்ற அனைத்தின் கதிர்வீச்சுகளாலும் முதலில் பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே, வெளியில் சென்றாலும், வெயிலில் சென்றாலும், வீட்டிலே இருந்தாலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

வெளியில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்க்ரீன் பூசவேண்டும். சன் ஸ்கிரீனில் Spf 15, 25, 30 அளவுகளில் விற்கப்படுகிறது. Spf 15 – 150 நிமிடங்கள், Spf 25 – 250 நிமிடங்கள், Spf 30 – 300 நிமிடங்கள் வரை கதிர்வீச்சுகளிடமிருந்து பாதுகாப்பு தருகிறது. அனைத்து சருமத்தினருக்கும் சிறந்தது Spf 25 சன்ஸ்கிரீன்தான்.

வறண்ட சருமத்துக்கு கிரீம் வடிவிலும் (cream based), எண்ணெய் மற்றும் பருக்கள் சருமத்துக்கு தண்ணீர் வடிவிலும் (water based), கருமை நிறத்தவருக்கு ஜெல் வடிவிலும் (gel based) சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 3 முறை சன் ஸ்கிரீன் பூசலாம். ஒருமுறை பயன்படுத்தி, மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு நீரால் கழுவி விட்டு பூசவேண்டும்.

வெளியில் இருப்பவர்கள், ஈர டிஷ்ஷூவால் துடைத்து விட்டு சன் ஸ்கிரீன் பூசிக் கொள்ளலாம். நிழலில் பயணிப்பதே நல்லது. காலை 10 முதல் மாலை 3 மணி வரை கொளுத்தும் சூரியனிடமிருந்து தப்பிக்க குடை, ஸ்கார்ப், கை மற்றும் கால் உறைகள், தொப்பி போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.35dd4b39 9ac5 41d2 878e 4c9ed0d1be0f S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button