சரும பராமரிப்பு

அழகுக்கு தடைபோடும் அலர்ஜி

வெயில் பட்டால் அலர்ஜி, தலைமுடிக்கு சாயம் பூசினால் அலர்ஜி, நகை அணிந்தால் அலர்ஜி, செருப்பு அணிந்தால் அலர்ஜி…. என உடுத்தும் உடை முதல், உண்ணும் உணவு வரை அத்தனையிலும் அலர்ஜி அலற வைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அலர்ஜி வகைகள் மற்றும் அதிலிருந்து குணமாவதற்கான தீர்வுகள் குறித்து பார்க்கலாம்.

• இன்றைய பெண்களுக்கு இளநரை தொல்லையை மறைக்க கலரிங், டை பயன்படுத்துகிறார்கள். அலர்ஜி உள்ளவர்கள் தங்கள் தலை முடிக்கு டை போட்டதுமே, வகிடு பகுதியில் அரிப்பு, சிவப்பாக பொரி பொரியாகத் தோன்றுதல்…. மாதிரியான அலர்ஜி அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.

முகம் கருமை படர்ந்ததுபோல் இருக்கும். ‘ஹெர்பல் ஹேர் டை’ என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான டைகளில் மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுவதே இல்லை. அதுதான் பிரச்னைக்கு காரணம். மூலிகைகள் சேர்க்கப்பட்ட டையை அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது.

அல்லது ‘லெஸ் பொட்டென்ஷியல் ஹேர் டை’ என்கிற பெயரில் கிடைக்கும் டைகளை பயன்படுத்தலாம். எந்த டையானாலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்வது அவசியம்.

• நெற்றியில் வைத்துக் கொள்ளும் சாந்து, தரமற்ற குங்குமம் மற்றும் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள பசையினால் வரக்கூடிய அலர்ஜி இது. இதனால் நெற்றிப் பகுதி தோல் உரிந்து சிவப்பாகத் தடித்துவிடும்.

நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில், வாஸ்லின் தடவி, அதன் மேலாக வீட்டில் உள்ள காபிப் பொடியை பொட்டு வடிவில், தொட்டு வைத்துக் கொள்ளலாம். அலர்ஜி பிரச்சனை தீரும்.

• முகம், கை, கால்களில் உள்ள முடியை நீக்குவதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துவதால் இந்த அலர்ஜி ஏற்படலாம். இந்த வகை க்ரீம்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் அலர்ஜி ஏற்பட்டு, தோலில் கோடு போட்டது போல் பொரி பொரியாக சிவந்து தடித்துப் போகும்.

நாளடைவில், அந்த இடம் வெள்ளையாகவே மாறிவிடும். இதை முழுமையாக சரி செய்யவும் முடியாது. எனவே உடனடியாக அந்த க்ரீம்களை தவிர்த்துவிடுவது தான் நல்லது.

• அழகழகாக மின்னும் சில நவீன வகை மெட்டல் நகைகளை அணியும்போது கை, கழுத்து, காது பகுதிகளில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு தங்கம்கூட அலர்ஜியை ஏற்படுத்தும்.

இவர்கள் உலோகத்தால் ஆன ஆபரணங்களைத் தவிர்த்து, மர வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களையோ, தோலினால் செய்யப்பட்ட நகைகளையோ பயன்படுத்தலாம்.

alarji

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button