28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
knee joint common joint prob
மருத்துவ குறிப்பு

இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!! மூட்டு வலியை போக்கும் முத்தான 4 பயிற்சிகள்

மூட்டு வலியை போக்கும் முத்தான 4 பயிற்சிகள்
உடல் எடைக்கும், மூட்டு வலிக்கும் நேரடித் தொடர்பு உண்டு. உடல் பருமன் காரணமாக முழங்கால் மூட்டுக்கு அழுத்தம் உண்டாவதால், வலி ஏற்படுகிறது.   சில எளிய பயிற்சி மூலம் தொடைப் பகுதி தசைகளுக்கு வலுகூட்டினால், அவை மேல் முழங்கால் மூட்டினை இழுத்துப் பிடித்து கீழ் மூட்டுடன் உரசுவதைத் தவிர்த்துவிடும்.  இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தால், 1 மாதத்தில் வித்தியாசத்தைக் காணலாம்.1.லெக் எக்ஸ்டென்ஷன் (ஐஸொமெட்ரிக்) :ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒவ்வொரு காலையும் பொறுமையாக நீட்டி 10 முதல் 15 நொடிகள் அப்படியே வைத்திருந்து பின்னர் மடக்கவும். இது போல் 5-7 முறை பயிற்சி செய்யவும். தேவைப்பட்டால், கணுக்காலில் கனம் சேர்க்கலாம் (ankle weight).2. சிட்-அப்ஸ் (ஐஸோடானிக்) :கால்களை அகட்டி, கைகளை முன்நோக்கி நீட்டி, நாற்காலியில் உட்கார்வது போல செய்ய வேண்டும். சில நொடிகள் இதேநிலையில் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இது போல் 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். ஸ்விஸ் பந்து இருந்தால, முதுகில் சாய்வதற்கு  அதனை பயன்படுத்தலாம்.

3. லயிங் அன்ட் லெக் ரைஸிங் (ஐஸோமெட்ரிக்) :

தரையில் மல்லாக்கப்படுத்து வலது காலை மேல் நோக்கி உயர்த்தி, 20 நொடிகள் வரை அப்படியே வைக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.  இதேபோல், இடது காலுக்கும் செய்யவும். ஒவ்வொரு பக்கமும் 5 முதல் 7 முறை பயிற்சி செய்யவும். தேவைப்பட்டால், கணுக்காலில் கனம் சேர்க்கலாம் (ankle weight). மிகவும் முற்றிய மூட்டு வலி உள்ளவர்களும்,, படுக்கையில் இருக்கும் நோயாளிகளும்கூட இதைச் செய்யலாம்.

4. லெக் கர்ல் (ஐஸோடானிக்) :

குப்புறப் படுத்துக்கொண்டு முழங்காலை பின் நோக்கி மடக்கி பின்பு நீட்ட வேண்டும். அடுத்த காலுக்கும் இந்த பயிற்சியை செய்யவும். இவ்வாறு இந்த பயிற்சியை 5 முதல் 10 நிமிடம் செய்ய வேண்டும்.

Related posts

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

nathan

மாதவிடாயுடன் தொடர்புடைய மார்பு வலிகள்

nathan

பசியின்மையை போக்கும் நெல்லிக்காய்

nathan

உங்க காதலரை/ காதலியை எப்படி உங்கள் வசம் வைத்துக் கொள்வது என தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சிறுநீரக பாதிப்பும் – தீர்க்கும் வழிமுறையும்

nathan

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன….தெரிஞ்சிக்கங்க…

nathan

வாயுத் தொல்லைக்கு எளிய இயற்கை மருத்துவம்

nathan

சர்க்கரை நோய் A to Z

nathan

உங்களுக்கு சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?இத படிங்க!

nathan