அசைவ வகைகள்

சூப்பரான ஐதராபாத் சிகம்புரி கபாப்

Shikampuri Kebab

மட்டனைக் கொண்டு எத்தனையோ ரெசிபிக்களை வீட்டில் முயற்சி செய்திருப்போம். ஆனால் ஐதராபாத்தில் மிகவும் பிரபலமான சிகம்புரி கபாப் ரெசிபியை செய்திருக்கமாட்டோம். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, ஐதராபாத் சிகம்புரி கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.

அதைப் படித்துப் பார்த்து, விடுமுறை நாட்களில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். மேலும் இது ஈஸியாக இருப்பதால், இதனை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா – 1/2 கிலோ

கடலைப் பருப்பு – 1/2 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

கருப்பு ஏலக்காய் – 4

பிரியாணி இலை – 2

பட்டை – 4 துண்டு

கிராம்பு – 6

தயிர் – 1/2 கப்

கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

புதினா – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

முட்டை – 2 (நன்கு அடித்தது)

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 3 கப்

செய்முறை:

முதலில் மட்டன் கீமாவை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு மற்றும் கழுவி வைத்துள்ள மட்டன் கீமா சேர்த்து, 20-25 நிமிடம் மட்டனை நன்கு வேக வைத்து இறக்க வேண்டும்.

மட்டனானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். குறிப்பாக அப்படி அரைக்கும் போது, அதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

பின் அரைத்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு அதனை 8-10 பாகங்களாக பிரிந்து, ஒவ்வொரு பாகத்தையும் உள்ளங்கையில் வைத்து, ரோல் போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள கீமாவை, முட்டையில் நனைத்து போட்டு 10 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து, பொன்னிறமாக பொரித்து வைத்தால், சுவையான ஐதராபாத் சிகம்புரி கபாப் ரெடி!!!

Related posts

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

பேக்ட் சிக்கன் : செய்முறைகளுடன்…!​

nathan

எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை விளக்கம்

nathan