உடல் பயிற்சி

நீண்ட நேரம் வேலையில் அமர்ந்திருப்பவர்களுக்கான வார்ம் அப் பயிற்சி

நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், ‘எங்கே நேரம் கிடைக்கிறது?’ என அலுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர் ஃபிட்டாக இருப்பதற்கான எளிமையான பயிற்சிகள் உள்ளன. அதில் வார்ம் அப் பயிற்சியும் ஒன்று.

வார்ம் அப் (Warm up) நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது தசைகள் இறுக்கம் அடைந்திருக்கும். அந்தநேரத்தில் பயிற்சி செய்தால், தசைகள் பாதிக்கப்படும். எனவே முதலில் பயிற்சி செய்ய ஏதுவாக தசைகளைத் தயார்ப்படுத்த வேண்டும். பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், நிமிர்ந்த நிலையில் சேரில் உட்கார்ந்து, புன்னகையுடன் ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். பாதங்களைத் தரையில் பதித்து, உள்ளங்கைகளைத் தொடைகளில் வைத்து, கண்களை மூடி 10 முறை ஆழமாக மூச்சை இழுத்து, வெளிவிட வேண்டும்.

பலன்கள்: தேவையான ஆக்சிஜன் உடலுக்குக் கிடைக்கும். உடல் வெப்பநிலை அதிகரித்து, பயிற்சிக்குத் தயாராக உதவும்.
b8de76bd fd7e 4d19 a777 dc32d97285c4 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button