உடுப்பி மசாலா தோசை

பச்சரிசி – 1 கப்,
அவல் – 1/2 கப்,
உளுத்தம் பருப்பு – 2 1/2 டேபிள்ஸ்பூன்,
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
ரவை – 2 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு மசாலா, எலுமிச்சை சாதம், வெண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பை ஒன்றாகக் கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் முதலில் அவலை அரைத்து பின்பு அரிசி, உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும். அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து 12 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவுடன் ரவை, சர்க்கரை சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து, மெல்லிய தோசைகளாக ஊற்றவும். தோசையை மூடி வைத்து ஒரு பக்கம் எண்ணெய் ஊற்றித் தடவவும். தேங்காய் சட்னியை மேலே தடவி உருளைக்கிழங்கு மசாலாவை ஒரு புறமும், எலுமிச்சை சாதம் ஒரு புறமும் வைத்து மடித்து, மேலே சிறிது வெண்ணெய் வைத்து சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply