இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் என்கிற இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு விலை ஆயிரம் ரூபாயிக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், கொரோனா தடுரப்பு மருந்தின் முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு கோவிஷீல்டு விலை 200 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படும். இது முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் இருக்கும். சாமான்ய மனிதன், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஏழை மக்கள், சுகாதார பணியாளர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால், வெளிச்சந்யைில் இதே தடுப்பு மருந்தை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசைப் பொறுத்த வரையில், ரூ.200 என்ற விலையில் தான் வழங்கியுள்ளோம். லாபம் பார்க்க விரும்பவில்லை. இதன் மூலம் நாட்டையும், மத்திய அரசையும் ஆதரிக்க விரும்புகிறோம் எனக் கூறினார்.
நாடு முழுவதும் சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பாக, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.