மருத்துவ குறிப்பு

ஒரே நாள்ல உடம்புல இருக்கற கழிவெல்லாம் வெளியேறணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

ஹெர்பல் பிராத் என்று அழைக்கப்படும் மூலிகை வெந்த சாறு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதாகும்.

இதை மற்ற உணவுகளுடன் சேர்த்தும் அருந்தலாம். எந்த உணவுடனும் சேர்க்காமல் தனியாகவும் அருந்தலாம்.

உங்கள் விருப்பத்திற்கேற்ற மூலிகையை பயன்படுத்தி நீங்களே வீட்டில் ஹெர்பல் பிராத் என்னும் மூலிகை வெந்த சாற்றினை தயாரித்து அருந்தி ஊட்டச்சத்தை பெற்று நலமாக வாழ முடியும்.

மூலிகை ஊறிய சாற்றினை எதைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பத்தை பொறுத்ததுதான். சைவம் அல்லது அசைவம் என்று தீர்மானித்தபின்னர், அதற்கு ஏற்ற சுவை தரும் மூலிகையையும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக, மீன் முள் அல்லது எலும்பு கொண்டு ஹெர்பல் பிராத் தயாரிப்பதற்கும் காளானை முதன்மை பொருளாக கொண்டு தயாரிப்பதற்கும் சுவையில் பெருத்த வேறுபாடு உண்டு.

எந்தெந்த மூலிகைகளை பயன்படுத்துவது என்று முடிவு செய்த பின்னர், நாம் எவ்வளவு சாறு தயாரிக்கப்போகிறோம் என்பதைப் பொறுத்து, பயன்படுத்தப்போகும் மூலிகைகளின் அளவினை தீர்மானிக்க வேண்டும். தேவைப்படும் மூலிகைகளின் அளவு பயன்பாட்டில்தான் தெரிய வரும்.

மூலிகைகளின் சுவை மற்றும் மணம் இவற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு எந்த அளவு மூலிகையை பயன்படுத்தவேண்டும் என்பதையும் முடிவு செய்யவேண்டும்.

மணமுள்ள மூலிகைகள் மற்றும் விதைகளை ஹெர்பல் பிராத்தில் பயன்படுத்தும் முன்னர் அவற்றை சிறிது நசுக்கி மூலிகை சாற்றில் இட்டால் அவற்றிலுள்ள எண்ணெய் மூலிகை சாற்றுடன் இணைந்து நல்ல மணத்தை அளிக்கும். அது மட்டும் இன்றி ஒரே நாளில் உடம்பில் இருக்கற கழிவெல்லாம் வெளியேறி விடும்.

எலும்பினை பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய அசைவ மூலிகை சாறு மற்றும் சைவ மூலிகை சாறு ஆகியவற்றுக்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

மூலிகை எலும்பு பிராத்
தேவையான பொருட்கள்
நீர் – ஒரு கலன் (ஒரு கலன் என்பது ஏறக்குறைய 4.5 லிட்டர்)
பார்ஸ்லே என்னும் வேர்க்கோசு – 4 முதல் 6 தழை
தைம் என்னும் நறுமண கறியிலை – 4 முதல் 6 அல்லது உலர்ந்த தைம் 1 மேசைக் கரண்டி அளவு
ரோஸ்மேரி – 2 தழை அல்லது உலர்ந்தது 1 மேசைக்கரண்டி
சாகே – 2 தழை அல்லது உலர்ந்தது 1 மேசைக்கரண்டி
லாரல் என்னும் புன்னைவகை இலை -1 கொத்து
ஆப்பிள் சிடர் வினீகர் – ¼ கப்
ஆடு, மாடு அல்லது மீன் எலும்பு – 2 பவுண்டு (1 பவுண்டு ஏறக்குறைய அரை கிலோ)
செய்முறை

எலும்புகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து அவற்றுடன் வினிகர் சேர்க்கவும். எலும்புகள் மூழ்குமளவுக்கு நீர் ஊற்றவும். எலும்புகளுக்கு ஓர் அங்குலம் மேலே நீர் மட்டம் இருக்கட்டும். நீர் வெதுவெதுப்பாகி குமிழ்கள் வருமளவுக்கு சூடாக்கவும். பின்னர் ஜூவாலையை குறைத்து இரண்டு முதல் மூன்று நாள்கள் (48 முதல் 72 மணி நேரம்) அடுப்பில் வைக்கவும். நீர் குறைய குறைய எலும்புகள் மூழ்குமளவுக்கு நீரை சேர்த்துக்கொண்டே இருக்கவும். எலும்புகள் மிதக்க ஆரம்பித்தால் அதற்கேற்ப நீர் மட்டத்தின் அளவை கூட்டவும்.

தயாரிப்பு முடிய இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இருக்கும்போது பார்ஸ்லே, தைம், ரோஸ்மேரி, சாகே மற்றும் லாரல் என்னும் புன்னைவகை இலைகளை சேர்க்கவும்.

அடுப்பை அணைத்துவிட்டு ஹெர்பல் பிராத்தை குளிர விடவும்.எலும்புகள், மூலிகைகளை இறுத்து சாற்றினை மட்டும் பாத்திரத்தில் எடுத்து குளிர வைக்கவும். பின்னர், குளிர்சாதன பெட்டியில் (ரெப்ரிஜிரேட்டர்) வைக்கவும்.

சாதாரண நிலையில் வைத்தால் 1 வாரமும் அதிலேயே உறைநிலையில் வைத்தால் 6 மாதமும் இதை வைத்து பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button