ஆரோக்கியம் குறிப்புகள்

இளமையுடன் இருக்க இந்தாங்க ஆலோசனை!

முதுமை வந்த பின்தான், இளமையின் அருமை புரியும். தலையில் நரை முடி வந்தாலோ, நீண்ட நேரம் நடக்க முடியாமல், மூச்சு வாங்கினாலோ அல்லது பழையபடி சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் போகும் பட்சத்திலோ, வயசாகிடுச்சு என்கிற நினைப்பு வந்து போகும். வயது ஆனாலும், எப்போதும் இளமையாக வைத்து கொள்வதற்கு, உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம்.

இதோ, இளமையுடன் இருக்க டிப்ஸ்:
மூன்று வேளை, முறையாக சாப்பிட வேண்டும். இடையிடையே, சுண்டல், ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர் போன்றவை சாப்பிடலாம். இதனால், உடல் வளர்சிதை மாற்றம், நன்றாக இருக்கும். சாப்பிடும் உணவில் இருந்து பெறப்படும் கலோரியானது, ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஆண்களுக்கு, சராசரியாக தேவைப்படும் கலோரி, 2,425; பெண்களுக்கு, 1875 கலோரியாகும்.

காலையில் சாப்பிடாமல் இருக்க கூடாது. காலையில் மட்டும், வயிறு நிறைய சாப்பிடலாம். மதியம் மற்றும் இரவு நேரங்களில், அளவாக சாப்பிட வேண்டும். மதிய வேளையில், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால், தூக்கம் வரும். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதால், தூக்கம் கெடும்.

உண்ணும் உணவு, சரிவிகித உணவாக இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் 50 சதவீதம், புரதம் 30, கொழுப்பு 15 சதவீதம் மற்றும் வைட்டமின், தாது உப்புகள் 5 சதவீதமாக இருத்தல் அவசியம். உணவை அவசரமாக, விழுங்குதல் கூடாது. நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சராசரியாக, ஒரு முறை உணவை விழுங்க, 15 முறை மெல்ல வேண்டும். ஆனால், 7 முறைதான் மெல்லுகிறோம். தினசரி, கீரை சேர்த்து கொள்ள வேண்டும். கீரையில் உள்ள நார்சத்துக்கள், கொழுப்பை கரைகின்றன. காலையில், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடல் உஷ்ணமாக உள்ளவர்கள், வெந்தயத்தை ஊற வைத்து, அதை சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி, ஒரு பேரீச்சை பழம், கைப்பிடி அளவு, பாதாம் பருப்பு இல்லையென்றால் வேர்கடலை சாப்பிடலாம். சமைக்கும் போது, அதிகமாக எண்ணெய் பயன்படுத்த கூடாது. ஒரே எண்ணெய் பயன்படுத்தாமல், நல்லெண்ணெய், கடலெண்ணெய் என்று மாற்றி, மாற்றி பயன்
படுத்தவும். கொழுப்பை அதிகப்படுத்தும், பாமாயில், வனஸ்பதி, நெய் ஆகியவற்றை தவிர்க்கலாம்.
fit and beauty

மாதம் இருமுறை, சிக்கன் சாப்பிடலாம். இரவில், அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. தினசரி, சராசரியாக, இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில், சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு, 2 டீஸ்பூன் உப்பு மற்றும் 3 டீஸ்பூன் சர்க்கரையே, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு, கெட்டுப் போகாமல் இருக்க, அதில் அதிக அளவு உப்பும், எண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. இது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. மேலும், ஒரு நாளைக்கு, 2 கப், டீ மட்டும் போதுமானது. கிரீன் டீ உடலுக்கு நல்லது. இரவில் சர்க்கரை இல்லாமல், ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். தினசரி, பழங்கள் மற்றும் பழச்சாறு சேர்த்து கொள்ளலாம். குளிர்பானங்களை, தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது, உடற்பயிற்சி வேண்டும். இவ்வாறு செய்தால், இளமை என்றும் உங்கள் கையில்தான்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button