ஆரோக்கியம் குறிப்புகள்

மன அழுத்தம் இல்லாமல் வாழ எளிய வழிமுறைகள்

எல்லா துறைகளிலும், எல்லா பணி நிலைகளிலும் அனைவருமே, ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு ஏற்படும், 75-90 சதவீத நோய்களுக்கு அவர்களின் மன இறுக்கமே அடிப்படை காரணமாக உள்ளது. மன அழுத்தம் ஒருவரின் இயல்பான வாழ்க்கையை திசை திருப்பி, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

எதிர்பாராத சூழ்நிலைக்கு ஒருவர் தள்ளப்படும் பட்சத்தில்தான் அவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், எதிர்பார்ப்புகளை குறைப்பதனால் மன அழுத்தத்திலிருந்தும் பெரிதளவில் விடுபட முடிகிறது.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலைப்பளு, குழப்பம் இவை அனைத்துமே மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள். சிலருக்கு அதிக சத்தம் கூட மன உளைச்சலை ஏற்படுத்தும்.

புகை பிடித்தல், சரியான உணவு பழக்கத்தை பின்பற்றாமல் இருப்பது, போதைக்கு அடிமையாவது, மது அருந்தும் பழக்கம், சரியான தூக்கம் இல்லாதது, உள்ளிட்டவை மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன. புகை பிடிக்கையில் உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு, மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளதாக பல ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருமணம், பதவி உயர்வு, போன்ற மகிழ்ச்சியான தருணங்களிலும், மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற நிகழ்வுகளை பதற்றமின்றி கையாளுவதால் மன அழுத்தத்தை குறைக்க முடிகிறது. ஆவேசம், கோபம் மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள்.

தெளிவான, அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவ்வுணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வருகிறது.
குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் உண்டாக்குகிறது.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு, மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயையும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது. பெண்கள் புத்தகங்களை படிப்பது மற்றும் இசை கேட்பது போன்ற செயல்களால் மன அழுத்தத்தை குறைக்கலாம்.mana%2Balutham

அலுவலகத்தில் இறுக்கத்தை தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல்,
நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுவதால், மன அழுத்தம் வராமல் தவிர்க்க இயலும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button