கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிகளுக்கு தண்டு கீரை பெஸ்ட்!

அசைவ உணவுகளை உண்பதால், ஏற்படும் பாதிப்புகளை இன்று பலர் உணர்ந்து, சைவத்துக்கு மாறி வருகின்றனர். இது போன்ற சைவ உணவு பிரியர்களில் சிலருக்கு, கீரை என்றாலே பிடிக்காது.

அப்படிப்பட்ட நபர்களின் உடலை, பரிசோதனை செய்து பார்த்தால், அவர்கள் வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவது தெரியவரும். அடிக்கடி கீரையை உணவில் சேர்த்து கொள்வோருக்கு, இப்பிரச்னைகள் இருக்காது.

இன்றைக்கு கீரையின் சுவையையும், அதில் உள்ள நன்மைகளையும் பலர் அறிந்துள்ளனர். குறிப்பாக, தண்டுக்கீரை நல்ல மருத்துவ குணம் உடையதாகும். முற்றாத இளம் தண்டுக்கீரை சமையலுக்கு சிறந்தது. சிலர் கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தண்டுகளை குப்பையில் போட்டு விடுகின்றனர். இது தவறு.

தண்டு கீரையை பொறுத்தவரை, அதன் தண்டில்தான் விசேஷம் உள்ளது. அதனால், தண்டோடு சேர்த்து சாப்பிடுவதே நல்லது. இக்கீரையின் தண்டுகளை, மெல்லியதாக வெட்டி பாசிப்பருப்புடன் சேர்த்து, வேக வைத்து கூட்டாகவோ, சாம்பாராகவோ சமைத்து சாப்பிட்டால் நல்ல சுவை கிடைக்கும். அல்லது, தண்டை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வேகவைத்து, சூப் ஆக குடிக்கலாம்.

இது உடலுக்கு அதிக சக்திதியை தரும். கீரையின் இலைகளை, முளைக்கீரை போன்றும் சாப்பிடலாம். பித்தம் மிகுதியாக உள்ளவர்கள், தண்டுக்கீரையை சாப்பிட்டால் அப்பிரச்னை நீங்கும். கீரையின் தண்டு, உடல் மெலிய சிறந்த மருந்தாகும். சிறுநீர் நன்றாக பிரியும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது.

ரத்தம் சுத்தி அடையும். உடல் தோற்றம் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும். உடல் சூடு குறைந்து கண்கள் பளபளப்பாகும். இக்கீரையை தினமும் உண்டு வரலாம். இதனால், இளமையில் முதுமை தவிர்க்கப்படும். முதுமையில் ஏற்படும் கால்சியம், இரும்பு சத்து விகித வேறுபாட்டை தண்டுக்கீரை சரி செய்யக்கூடியது.%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%881

கருவுற்ற பெண்கள், தினமும் தண்டுக்கீரையின் சாறு ஒரு கப், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால், மகப்பேறு எளிதாக நடக்கும். குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் காணப்படும். குழந்தைகளின் உடல், எலும்பு, தசை வளர்ச்சிக்கு, கால்சியம் சத்து மிகவும் முக்கியம். கால்சியத்தை பல்வேறு உணவுகள் வாயிலாக பெற முடிந்தாலும், தண்டுக்கீரையில்தான் அதிக கால்சியம் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், 400 மி.கி., உள்ளது.

இவ்வளவு அதிகமான கால்சியம் சத்து முருங்கைக்கீரை, வெந்தயக்கீரையில் மட்டுமே உள்ளது. அதனால், மிக எளிமையாக மார்க்கெட்டில் கிடைக்கும் தண்டு கீரையை, சமையலுக்கு பயன்படுத்தி வந்தால், பல நோய்களுக்கு குட்பை சொல்லலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button