தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா பொடுகை ஒழிப்பதற்கு வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படும் 7 எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

ஒரு வருடத்தில் அதிகப்படியான நேரத்தில் வெயிலை சந்திக்கும் நம் நாட்டில் மழைக்காலமும் குளிர் காலமும் சொர்க்கத்தை போல் தெரியும். வெயிலில் வெந்து போகும் நமக்கு எப்பத்தான் மழைக்காலமும் குளிர் காலமும் வரும் என்ற ஏக்கம் ஏற்படும். அதுவும் குளிர் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். மார்கழி மாத குளிரில் போர்த்திக் கொண்டு தூங்குவது என்றாலே அலாதி சுகம் தான். அந்த சுகத்திற்காகவே மார்கழி மாதம் பிறப்பதற்கு வழி மேல் விழி வைத்து காத்திருப்போர்கள் பல.

குளிர் காலமும் வந்து விட்டது. சுகம் என்று ஒன்று இருந்தால் அதனுடன் சேர்ந்து சில கஷ்டங்களும் இருக்க தானே செய்யும். ஆம், குளிர் காலத்தோடு சேர்த்து சில பிரச்சனைகளும் சேர்ந்த வரும். அது தான் உதடு வெடிப்புகள், வறண்ட சருமம், பொடுகு போன்ற சில இம்சைகள். சிலர் இந்த பிரச்சனைகளால் வருடம் முழுவதும் அவதிப்பட்டு வந்தாலும், குளிர் காலத்தில் இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது. அதுவும் குளிர் காலத்தில் உங்கள் தலைச்சருமம் வறண்டு போவதால் பொடுகு அதிகமாக தென்படும்.

இந்த பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? வருத்தம் வேண்டாம். இதோ பொடுகு இல்லாத தலை முடியை சீக்கிரமாகப் பெற சில எளிய வீட்டு சிகிச்சைகளை உங்களுக்காக நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

வேம்பு

வேம்பை கொண்டு வீட்டில் தயார் செய்யப்படும் பேக்கை வைத்து பொடுகு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

தேவையானது:

¼ கப் வேப்பிலைச் சாறு, தேங்காய் பால் மற்றும் பீட்ரூட் ஜூஸ்

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை:

அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, தலைச்சருமத்தில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து மூலிகை ஷாம்புவை மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவி விடவும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

வெந்தயம்

வெந்தயமும் கூட பொடுகை குறைக்க உதவும். அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் இந்த பொடுகுகளை ஓடச் செய்யும்.

தேவையானது:

2 டீஸ்பூன் வெந்தயம்

1 கப் தண்ணீர்

1 அப் ஆப்பிள் சிடர் வினீகர்

செய்முறை:

முந்தைய நாள் இரவு வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலை அதனை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் ஆப்பிள் சிடர் வினீகர் சேர்த்து உங்கள் தலைச்சருமத்தில் தடவவும். அதை அப்படியே 30 நிமிடங்களுக்கு விட்டு விட்டு, பின் மிதமான ஷாம்புவை கொண்டு அலசவும். அரிப்பு மற்றும் வறண்ட தலைச்சருமத்தில் இருந்தும் இது நிவாரணத்தை அளிக்கும்.

ஆஸ்பிரின்

இது இயற்கையான சிகிச்சை இல்லை தான் என்றாலும் கூட, பொடுகை வேகமாக நீக்கும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆஸ்பிரினில் சாலிசிலேட்டுகள் என்ற பொருள் உள்ளது. இது பல ஷாம்புக்களில் அமில வடிவில் இருக்க கூடிய முக்கியமான பொருளாகும்.

தேவையானது:

2 ஆஸ்பிரின் மாத்திரைகள்

ஷாம்பு

செய்முறை:

மாத்திரைகளை நசுக்கி பொடியாக்கவும். அதனுடன் சாதாரண ஷாம்புவை சேர்க்கவும். அது நுரை பொங்கும் வரை தலையில் தேய்க்கவும். அதனை அப்படியே 5 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். தலை முடியை கழுவவும். தலைச்சருமத்தில் ஆஸ்பிரின் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், சாதாரண ஷாம்புவை கொண்டு மீண்டும் முடியை அலசுங்கள்.

பேக்கிங் சோடா

ஆம், பொடுகை நீக்க பேக்கிங் சோடாவும் கூட உதவுகிறது. இது அல்கலைன் குணத்தை கொண்டுள்ளதாகும். அதனால் மிதமான தோல் நீக்கியாக செயல்பட்டு, செத்த சரும அணுக்களை நீக்க உதவும். மேலும் தலைச்சருமத்தில் எண்ணெய் சுரப்பதையும் கட்டுப்படுத்த உதவும்.

தேவையானது:

2 பேக்கிங் சோடா

சிறு துளிகள் தண்ணீர்

செய்முறை:

உங்கள் தலை முடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பேக்கிங் சோடாவில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து அதனை பேஸ்ட் வடிவில் மாற்றிடுங்கள். அதனை உங்கள் தலைச்சருமத்தில் தடவி, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். சாதாரண தண்ணீர் அல்லது ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசவும்.

பூந்திக் கொட்டை

பழமை வாய்ந்த இந்திய சிகிச்சையான இது, கூந்தலை நீளமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும். பூந்திக் கொட்டைகளை பாரம்பரியமாகவே சீயக்காயுடன் சேர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தலைச்சரும பிரச்சனைகளை நெருங்க விடாமல் பாதுகாக்கும்.

தேவையானது:

10-15 பூந்திக் கொட்டை

1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது ஜூஸ்

2-3 கப் தண்ணீர்

செய்முறை:

பூந்திக் கொட்டைகளை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வையுங்கள். மறுநாள் காலை, அதனை அரைத்து, தண்ணீரில் கொதிக்க வையுங்கள். பின் வடிகட்டுங்கள். இப்போது அதனுடன் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது பொடியை கலந்து கொள்ளவும். வேண்டுமானால், கொஞ்சம் தண்ணீர் கலந்து பேஸ்ட் வடிவில் மாற்றிக் கொள்ளவும். 30 நிமிடங்களுக்கு தலைச்சருமத்தின் மீது தடவவும். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு அலசவும்.

எலுமிச்சை

இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. மேலும் அமிலத்தன்மையுடன் விளங்குகிறது. இதனால் பொடுகை அண்ட விடாது. அதனை தலையில் பிழிந்திடலாம் அல்லது தலையில் வைத்து நன்றாக தேய்க்கலாம்.

தேவையானது:

4 எலுமிச்சை பழ துண்டுகள் அல்லது ஜூஸ்

செய்முறை:

எலுமிச்சை துண்டுகளை உங்கள் தலைச்சருமத்தில் தடவி அதை அப்படியே 10-15 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் சாதாரண தண்ணீரில் அலசுங்கள். நல்ல பலனை பெற இதனை வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

சோத்துக் கற்றாழை ஜெல்

பொடுகை கட்டுப்படுத்துவதில் கில்லாடியாக செயல்படுகிறது சோத்துக் கற்றாழை ஜெல். அதிலுள்ள பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் போக, சருமத்தை இதமாக வைக்கவும் அரிப்பை நிறுத்தவும் கூட இது உதவுகிறது.

தேவையானது:

5 டீஸ்பூன் சோத்துக் கற்றாழை ஜெல்

செய்முறை:

சோத்துக் கற்றாழை செடியில் இருந்து ஜெல்லை நேரடியாக எடுக்கலாம் அல்லது கடைகளில் விற்கும் ஜெல்லை பயன்படுத்தலாம். அதனை உங்கள் தலைச்சருமத்தில் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். உங்கள் தலையில் எண்ணெய் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். சாதாரண தண்ணீர் அல்லது மிதமான ஷாம்புவை கொண்டு கழுவுங்கள். வறண்ட முடியை கொண்டவர்கள் ஒரு நாள் கழித்து கூட முடியை கழுவிக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button