மணப்பெண் அழகு குறிப்புகள்

நெற்றியில் திலகம் இடுவது ஏன்?

இந்துசமயப் பற்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள், முக்கியமாக மணமான பெண்கள், நெற்றியில் திலகம் அல்லது பொட்டு அணிகின்றனர். பல சமூகங்களில் மணமான பெண்கள் எந்த நேரத்திலும் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் திகழவேண்டும் என்ற நெறிமுறை வலியுறுத்தப்படுகிறது. சமயக் கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் திலகம் இடுவதை ஒரு சடங்காகவே செய்கின்றனர்.

ஆன்மிகப் பெரியோர்களையும், ஆண்டவனையும் திலகமிட்டு தொழுது வணங்குவதும் வழக்கில் உள்ளது. வட இந்தியாவில் பல பகுதிகளில் மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கும் போதும் வழியனுப்பும் போதும் திலகமிடுவது வழக்கில் உள்ளது. சந்தனம், குங்குமம், விபூதி முதலியனவற்றை நெற்றியில், புருவங்களுக்கு இடையே உள்ள பகுதியில் அணிகிறோம். இப்பகுதி நினைவாற்றல், சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் மையமாகும். யோக சாத்திரத்தில் இது ‘ஆக்ஞா சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.

திலகத்தின் நெற்றியில் இடும்போது “இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பாராக. புனிதமான இந்த உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும். என் செயல்கள் நேர்மையானவையாக இருக்கட்டும்” என்று பிரார்த்திக்கப்படுகிறது. நம் உடல் முழுவதும் மின்காந்த அலைகளாக சக்தியை வெளிப்படுத்துகிறது. நெற்றியும், புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியும் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனம் கவலையுறும் போது தலை உஷ்ணமடைந்து தலைவலி ஏற்படுகிறது.%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

நெற்றியில் அணியும் திலகம் நெற்றியை குளிர வைத்து உடல் உபாதையில் இருந்து பாதுகாக்கிறது. நெற்றியும் புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியின் மூலமாக நம்மை மற்றவர்கள் தன்வசப்படுத்தலை தடுக்கிறது. உடலின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது. சில பெண்கள் பிளாஸ்டிக்கினால் ஆன ஒட்டும் பொட்டுகளை பயன்படுத்துகிறார்கள். இவை திலகங்கள் போல பயன் தருபவை அல்ல. திலகம் அணியும் மரபு இந்தியர்களுக்கே உரித்தான ஓர் வழக்கமாகும். இந்தியாவைத் தவிர உலகில் எந்த இடத்திலும் இந்தியர்களை இனம் காண இது உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button