27.2 C
Chennai
Wednesday, Jul 24, 2024
Kangana Ranaut
சரும பராமரிப்பு

கவர்ச்சியான தோற்றம் வேண்டுமா

பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டும். பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறைப்பது முறையன்று. ஒருவர் பற்பல உடற்பயிற்சிகளையும் செய்து முழு உடலையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

* உடல் அமைப்பை சரி செய்ய நடனமே சிறந்த பயிற்சியாகும். நடனமாடும் போது உடலில் உள்ள அனைத்து பாகங்களும் அசைந்து பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடல் முழுவதும் உள்ள எக்ஸ்ட்ரா கொழுப்புககள் கரைந்து உடலை சீர்படுத்துகிறது. தினமும் நடனப்பயிற்சி மேற்கொள்ளும் போது அது நமது உடலை நல்ல வடிவத்தில் மாற்றி உடலின் சக்தியை அதிகரிக்கிறது. ஆகையால் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு சிறந்த பயிற்சி நடனமாகும். இது மிகவும் சிறப்பான பயிற்சியாகவும் ஆனந்தத்தை தரக்கூடியதாகவும் அமைகின்றது.

* இதயத்தை பலப்படுத்த சைக்கிளிங், தடகளம், டிரெட் மில், ஸ்டெப்பிங் மற்றும் பல பயிற்சிகள் உள்ளன. இத்தகைய பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உங்கள் உடலுக்கு தேவையான சக்தியையும், தாங்கும் உறுதியையும் கொடுக்கின்றன.

* பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதின் மூலம் எடையை குறைக்க முடியும். இவ்வாறு உடலை வடிவுப்படுத்தவும் முடியும். இத்தகைய பயிற்சிக்கு அதிக சக்தி தேவை மற்றும் இப்பயிற்சி மூலம் அதிக கொழுப்பையும் குறைக்க முடியும். இதுவும் கொழுப்பை குறைப்பதற்கான சிறந்த முயற்சியாகும்.

* ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் அதாவது கைகள், கால்கள், இடுப்பு, ஆகிய பாகங்களை நீட்டி பயிற்சியை தொடர்ந்து செய்தால் எடை வெகுவாக குறையும். உடலை கட்டுக்குள் கொண்டு வர இப்பயிற்சி உதவுகிறது. உடலுக்கு நல்ல அமைப்பையும் தருகிறது. ஸ்ட்ரெட்சிங் செய்வதால், உடல் இறுக்கமடைவதால் கவர்ச்சியான உடலை பெற முடியும்

* நீச்சல் வேறு எந்த பயிற்சியை காட்டிலும் இரு மடங்கு கலோரிகளை குறைக்க வல்லது. நீச்சல் பயிற்சி கால் மற்றும் கைகளை வலுவூட்டி உடலையும் குறைக்கிறது. ஆகையால் நீச்சலும் உடலை குறைப்பதற்கு ஒரு சிறந்த பயிற்சியாகும்.Kangana Ranaut

* 200 லிருந்து 300 ஸ்கிப்ஸ் ஒரு நாளைக்கு செய்வது உங்களை கவர்ச்சியாக வைக்க உதவும். உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் சீர்படுத்தி உடலை கச்சிதமாக வைக்க உதவுகிறது.

Related posts

இந்த பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க… முகப்பரு அதிகமா வருமா?

nathan

குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க..

nathan

சருமத்தை வெள்ளையாக்க முயற்சிப்போர் செய்யும் தவறுகள்!!!

nathan

சரும பிரச்சனைகளை தடுக்கும் பாதாம் எண்ணெய்!!

nathan

தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும், சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்……

sangika

சூப்பர் டிப்ஸ்! கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்!!!

nathan

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா?

nathan

சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை

nathan