சிற்றுண்டி வகைகள்

கோதுமை பிரட் முட்டை உப்புமா

தேவையான பொருட்கள் :

கோதுமை பிரட் – 3 துண்டுகள்
முட்டை – 2
பெரிய வெங்காயம் – 1
மிளகு தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு
உளுத்தம்பருப்பு
சீரகம்
ப.மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• முட்டையில் இருந்து வெள்ளைகருவை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

• முதலில் பிரட்டை துண்டுகளாக்கி கொள்ளவும்.

• கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

• வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் முட்டையை(வெள்ளை கருவை மட்டும்) ஊற்றி மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

• முட்டை உதிரியாக வந்ததும் வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் கிளறவும்.

• சுவையான சத்தான பிரட் முட்டை உப்புமா ரெடி
de56b3b7 2ef5 4a7a bb81 59ba095bc1d7 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button