தலைமுடி சிகிச்சை

தலை முடி உதிர்கின்றது என்ற கவலையா? பாட்டி வைத்தியம்

இன்றைய பெண்கள் ஆரோக்கியத்துடன் கூடிய அழகையே பெரிதும் விரும்புகிறார்கள். உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும் அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ரசாயன கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறுவதே ஆரோக்கியமான அழகு.

இயற்கை முறையில் தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப்பெறுவது சாத்தியமாப என்றால் சாத்தியமே என்று சொல்கிறார். பிரபல இயற்கை அழகு கலை நிபுணர் ராஜம் முரளி.

உச்சி முதல் பாதம் வரை பெண்களுக்கான அழகு குறிப்புகள் பற்றி இங்கே விளக்கம் அளிக்கிறார். முதலில் கூந்தல் பராமரிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்வற்றுக்கான தீர்வுகளைப் பற்றி பார்ப்போம். இன்றைய பெண்களில் பலருக்கு முடி உதிர்தல், வழுக்கை, அடர்த்தி குறைவு, நீளமாக வளர்வது இல்லை, பொடுகு, நரை இவை எல்லாம் இன்றைக்கு தலையாய பிரச்சினையாக இருக்கின்றன.

இவற்றில் இருந்து நம்முடைய தலையை பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பதற்கு பாரம்பரியமான வழக்கத்தில் இருந்து வரும் அழகு சிகிச்சை முறை தான் அற்புதமான தீர்வு. தலையில் சிலருக்கு செதில் செதிலாக பொடுகு ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். இவர்களுக்கு முடி உதிர்ந்து கொண்டே இருக்கும்.

தலை முடியின் வேர் பகுதியில் எண்ணைப்பசை இல்லாமல் வறண்டு போவதால் தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. மன அழுத்தம், வேலைப்பளு அதிகம், குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்க வேண்டிய கட்டாயம், 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை பார்க்கும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் ஆகியோருக்கு இது போன்ற குறைபாடு இருக்கும்.

சுத்தமின்மை, மாதக்கணக்கில் தலைக்கு குளிக்காமல் இருப்பது, தரமற்ற ஷாம்பூ உபயோகிப்பது போன்ற காரணங்களால் பொடுகு வரலாம். வீட்டில் யாராவது ஒருவருக்கு இருந்தாலும் அடுத்தவருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும். இதன் காரணமாக தோல் கூட பாதிப்படையும், கூந்தல் வளர்ச்சிக்கும் தடை ஏற்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பொடுகு வந்து விட்டது என்று தெரிந்தாலே ஈறும் பேனும் எங்கிருந்தாவது ஓடோடி வந்து தலையில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடும். இவர்கள் தங்கள் தலை முடியின் வேர்ப்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வீட்டிலேயே வைத்தியம் இருக்கிறது.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்துடன், ஒரு டீஸ்புன் துவரம் பருப்பை நைசாக அரைத்து குளிக்கும் முன் தலையில் வேர் பகுதி வரை நன்கு பூசி தடவிக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிக்கும் போது தேய்த்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடியின் வேர்ப்பகுதியில் வறட்சி ஏற்படாமல் எப்போதும் குளிர்ச்சியாக வைத்து இருக்கும்.

இது முடி உதிர்வதை தடுப்பதுடன் மீண்டும் வளர ஆரம்பிக்கும். இது போல் வாரம் 3 நாள் செய்ய வேண்டும். வயது அதிகரிப்பு காரணமாகவும் உடல் ரீதியான மாற்றங்கள் நேரும் போதும் முடி வளர்ச்சி குறைந்து விடும். இது நபருக்கு நபர் வித்தியாசப்படும்.

ஹைபர், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோலில் வியாதி உள்ளவர்கள் ஆகியோருக்கு கண்டிப்பாக முடி கொட்டும். பொதுவாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 முடிகள் உதிரும். அதே அளவு முடி வளரவும் செய்யும். முடி கொட்டுகிறதே என்று தலையை சீவாமல் இருந்தால் முடி வளர்ச்சி முற்றிலும் நின்று விடும்.

கூந்தலுக்கு ஷாம்பு, ஹேர் டிரையர், கெமிக்கல் ஹேர்டை பயன்படுத்துவதாலும் பெர்மிங் செய்தல், முடியை நேராக்குதல், அயர்னிங், பிளீச்சிங், கலரிங் செய்து கொள்வதாலும் தலைமுடி உதிர்வதுடன், இளம் வயதிலேயே முடி நரைத்து வயோதிகத் தோற்றத்தை ஏற்படுத்தி விடும். பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்.

பெண்களுக்கு முடி நீளமாக இருப்பதால் வழுக்கை விழுவது தடுக்கப்படுகிறது. அதே சமயம் முடி மெல்லியதாக வலுவிழந்து போய்விடும். பெண்கள் `பாப்’ செய்து கொள்வதாலும் வழுக்கை வர வாய்ப்புகள் இருக்கின்றன.

சிலருக்கு முன் நெற்றியில் வழுக்கை விழும். பரம்பரையில் யாருக்கேனும் வழுக்கை இருந்தால் அவர்களின் சந்ததிக்கும் வழுக்கை ஏற்படும். ஷவரில் குளிக்கும் போது வேகமாக தண்ணீர் தலையில் விழுவதால் வழுக்கை விழும். முடியானது பதினைந்து முதல் இருபத்தைந்து வயதுக்குள் தான் இயல்பான வளர்ச்சி வேகத்தில் இருக்கும்.
Untitled 28

அதற்கு பிறகு வேகம் குறைந்து விடும். அதே போல் `டீன்-ஏஜ்’ பருவத்தில் தான் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். எனவே இந்த கால கட்டங்களில் தான் முடி பராமரிப்பில் நாம் அதிக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் தான் என்றில்லை.
கிராமப்புற இளம் பெண்கள் கூட இப்போது தலைக்கு எண்ணெய் வைக்காமல், தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்வதையே `பேஷன்’ என்று நினைக்கிறார்கள். இது, முடி வளர்ச்சிக்கு முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button