முகப் பராமரிப்பு

எண்ணெய் சருமத்தை தடுப்பது எப்படி?

நிறைய தண்ணீர் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி ப்ளஸ் நான்கு மிளகு ப்ளஸ் ஒரு டீஸ்பூன் தேன் அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், காரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தில் சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும். வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகம் கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். அதே நேரத்தில் சருமப் பாதுகாப்பிற்கான லைப்பிடுகள் வெளியேறாது. முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள். இந்த வகையில் நிறைய மென்மையான முகம் கழுவிகள் கிடைக்கின்றன.

ஜான்சன் அண்ட் ஜான்சன் க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பயன் தரும். ஆன்டிபாக்டீரியல் க்ளன்சர்களைப் பயன்படுத்துங்கள்.. ஆயில் அதிகம் இருப்பதால் பாக்டீரிய தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவே இந்த வழி. செட்டாபில் அல்லது விச்சி கிளன்ஸர்களை பயன்படுத்திப் பாருங்கள். களிமண் அடிப்படையில் செயல்படும் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழமாக சுத்தம் செய்யும். ஹிமாலயா பியூரிபையிங் மட் பேக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

ஆயில் அதிகம் சுரப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது. பகல் நேரங்களில் ஜெல் போன்ற சன் ஸ்கிரீன்கள் உதவும். ஆலுவேரா கூட உதவும். இதற்கு ஒருமுறை நீங்கள் நல்ல அழகு சிகிச்சை நிபுணரை அணுகி, உங்கள் முகத்தை பரிசோதித்து, பின் அவர் தரும் ஆலோசனைப்படி முகத்திற்கான மேக்கப் முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.26 1472209351 greentea

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button