ஆரோக்கியம் குறிப்புகள்

பாலுடன் தேன் அருந்துபவரா நீங்க.?

எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், விட்டமின்களும் தேனில் உண்டு,
100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்:

நீர் – 23%

மாவுச்சத்து 76%

புரதம் – 4%

கால்சியம் – 5%

இரும்பு – 0.4 %

விட்டமின் – பி2, சி

நியாசின் – 0.2 யூனிட்

மற்றும் சோடியம், பொட்டாசியம், சல்பர், மக்னீசியம் ஆகியவை உள்ளன.

மருத்துவ குணங்கள்

தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம்.

தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது.

இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது.

தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும்.

ஏதேனும் பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது.

பாலுடன் தேன்

பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

இரவு தூங்கும் போது குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள், வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமடையும்.

சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால், அதில் உள்ள ஆன்டி பாக்டீரியா, உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மேலும் இவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
honey 002

உடல் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு உட்கொண்ட பின்னர், பாலுடன் தேன் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button