அலங்காரம்மணப்பெண் அழகு குறிப்புகள்

திருமணத்தன்று அழகாக ஜொலிப்பதற்கான சில டிப்ஸ்….

bollyஒவ்வொரு பெண்ணும் தன் திருமண நாளில் தான் முழுமையான அழகுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லோருக்கும் மத்தியில் தான் ஒரு தனிப்பட்ட ஈர்க்கும் அழகுடன் விளங்க வேண்டி எடை இழப்பு, சரும பராமரிப்பு முதல் ஆடைகள் வரை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். திருமணத்திற்கு தேவையான உடல் எடையை பெறுவது பெரும்பாலும் பெண்களுக்கு ஒரு புதிய பிரச்சினை ஆகும். மேலும் பல அம்சங்களும் அழகாக இருப்பதற்கு முக்கியமாக இருக்கின்றன. ஒரு குறைந்த கலோரி உடைய சரிவிகித ஊட்டச்சத்து, பக்க விளைவுகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தாத அழகுப்பொருட்களை பயன்படுத்தி, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சிறப்பு சிகிச்சை கவனிப்பும் இன்றியமையாததாகும். அழகு மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைப் பெற, முக மற்றும் உடலின் சிகிச்சையை வெகு முன்னரே தொடங்க வேண்டும். இப்போது திருமண நாள் முன்பாக சருமத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான சில அழகுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் படித்து பயன்பெறுங்கள்.

உலர்ந்த சருமம் உலர்ந்த சருமம் பெரும்பாலும் மணப்பெண்ணால் அனுபவிக்கப்படும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். தோல் உலர்ந்தும் பொலிவிழந்தும் இருந்தால், இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ள பொருட்கள் தோலை, சுத்தமான, மென்மையான மற்றும் பார்ப்பதற்கு அழகாக வைக்க நன்றாக வேலை செய்கிறது. ஒவ்வொரு நாளும் மாய்ஸ்சுரைசரை சருமத்தில் பயன்படுத்த மறக்க வேண்டாம். வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ இருக்கின்ற ஒரு மாய்ஸ்சுரைசர் தேர்வு செய்யவும். ஏனெனில் இவை முகப்பருவை கட்டுப்படுத்தும்.

முகப்பரு முகப்பருவுடன் போராட பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. முகப்பருவைப் போக்குவதற்கு ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் க்ரீம் போன்றவற்றை சரியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எண்ணெய் இல்லாமல் இருக்கும் ஒரு மாய்ஸ்சரைசரைத் தேர்வுச் செய்து பயன்படுத்தவும். கடுமையான முகப்பரு இருந்தால், சரியான சிகிச்சை பெற தோல் மருத்துவரை பார்க்க வேண்டும்.

கண்களை சுற்றிலும் கருவளையங்கள் கண்களை சுற்றிலும் கருவளையங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்க குறைபாடு, ஒவ்வாமை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக ஏற்படுகிறது. இப்போது சந்தையில் உள்ள பல்வேறு சிகிச்சைகள் மற்றும் தயாரிப்புகள் பெரும்பாலானவைகள் கண்களை சுற்றிலும் இருக்கும் கருவளைய தோற்றத்தை குறைக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. வைட்டமின் சி, கே மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் கொண்ட க்ரீம்கள் வழக்கமாக நன்றாக செயல்படுகிறது. க்ரீம் எதிர்பார்த்த படி வேலை செய்யவில்லை என்றால், பதட்டப்பட வேண்டாம். இயற்கைப் பொருட்களை பயன்படுத்தினால், நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

வீங்கிய கண்கள் கண்களை சுற்றிலும் உண்டாகும் கருப்பு வளையம் போல், வீங்கிய கண்கள் கூட தற்காலிகமான அழுத்தம் காரணமாகவும், திரவத்தை தக்க வைத்தல், ஒவ்வாமை அல்லது தூக்க குறைபாடு போன்றவற்றால் ஏற்படுகிறது. வீங்கிய கண்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் போது, அதை ஒவ்வாமை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். ஒவ்வாமை காரணமாக இல்லை என்றால் மாறாக கண்களுக்கான க்ரீம்கள், முகத்திற்கு பூசும் க்ரீம்கள் மற்றும் குளிர் நீரால் நன்றாக முகத்தை கழுவுதல் என எளிதாக செய்ய கூடிய சில சிகிச்சைகளும் உள்ளன. வைட்டமின் சி அல்லது ஆக்ஸிஜனேற்றம் கொண்ட க்ரீம், வீங்கிய கண்களின் பிரச்சினையை தீர்க்க சிறந்த க்ரீம்கள் ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button