முகப் பராமரிப்பு

முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்

பெண்களுக்கு எப்போதும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக அதிக பணம் செலவு செய்வார்கள். ஆனால் இந்த முட்டைகோஸ் ஃபேஸ் பேக் செய்து வந்தால் விரைவில் உங்கள் முகம் ஜொலிப்பதை காணலாம்.

முதலில் முகத்தை காய்ச்சாத பாலால் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்துவைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக்கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறை செய்து கொள்ளலாம்.
c5ce4d18 5bc4 4818 8910 247c578b65d1 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button