26 C
Chennai
Thursday, Jan 23, 2025
ester
மருத்துவ குறிப்பு

தெரிந்து கொள்ளுங்கள்! தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மார்பகங்களின் வடிவத்தை நன்றாக மாற்றிட சில வழிகள்!!!

கர்ப்ப காலத்தின் போது உங்கள் உடலில் பல விதமான மாற்றங்கள் ஏற்படும். சொல்லப்போனால், உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் மார்பகங்களும் கூட பலவித மாற்றங்களை மேற்கொண்டிருக்கும். சிலருக்கு வழியை ஏற்படுத்தும், சிலருக்கு தீமையை ஏற்படுத்தாத லேசான மாற்றங்களை மட்டுமே அளிக்கும். இருப்பினும், கர்ப்ப காலத்தின் போது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு தேவைப்படும் தாய்ப்பாலை கொடுப்பதற்கு முன் கூட்டியே உங்கள் உடல் தயாராகவே இந்த அறிகுறியாகும்.

பெரும்பாலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தொய்வடைந்து தொங்கி போயுள்ள தங்களின் மார்பகங்களைப் பற்றி குறை கூறுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதைப் பற்றி தாய்மார்களுக்கு நேர்மறையான எண்ணம் நிலவினாலும், சந்தோஷமற்ற உடல் மாற்றங்களை அவர்கள் வாழ்க்கை முழுவதும் கையாள வேண்டியிருக்கும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு, உங்கள் மார்பகங்களின் வடிவத்தை நல்ல விதமாக மாற்றிட பல வழிகள் இருக்கவே செய்கிறது. அவைகளை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

தாய்ப்பாலை நிறுத்திய பிறகு, இயற்கையான வழிகளில் உங்கள் மார்பக வடிவத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான வழிகள், இதோ!

சரியாக உண்ணுங்கள்

குழந்தை பெற்ற பிறகு, தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் பல பெண்கள் செய்யும் பொதுவான ஒரு தவறு என்னவென்றால், சாச்சுரேட்டட் கொழுப்பு அடங்கியுள்ள உணவுகளை தவிர்ப்பது. அதற்கு முக்கிய காரணமே பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையே. இருப்பினும் இதனால் சரும பாதிப்பு ஏற்படும்; குறிப்பாக மார்பக பகுதிகளைடச் சுற்றி. தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகங்கள் நீட்சி அடைந்து சிரமமடைவதால், மார்பகங்கள் தொய்வு பெற்று நெகிழ்வடையும். அதற்கு காரணம் மார்பகங்களின் அணு சவ்வுகள் சேச்சுரேட்டட் கொழுப்புகளால் ஆனவை. சொல்லப்போனால், சேச்சுரேட்டட் கொழுப்புகளை உட்கொண்டால், பிரசவத்திற்கு பிறகு பால் கொசுப்பது அதிகரிக்கும். இதனால் மார்பகங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவது தடுக்கப்படும். அதனால் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் சரியான உணவுகளை உண்ணுங்கள். சேச்சுரேட்டட் உணவுகள் வளமையாக உள்ள பால் பொருட்கள், முட்டைகள் மற்றும் இறைச்சிகளை உண்ணுங்கள். இது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து சருமத்தின் நெகிழ்வு தன்மையை மீட்டுத் தரும்.

சரியான வயதில் குழந்தையை தாய்ப்பால் குடியை மறக்கச் செய்யுங்கள்

உங்கள் மார்பகங்கள் தொய்வடையாமல் இருக்க குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நீட்டித்துக் கொண்டே போகாதீர்கள். மாறாக குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் குடியை மறக்கச் செய்ய வேண்டும் என்பதை கவனியுங்கள். பொதுவாக குழந்தைகளுக்கு 7-8 மாதங்கள் ஆகும் போது திண்ம வடிவிலான உணவுகளை உண்ண தொடங்கி விடுவார்கள். அந்நேரத்தில் அவர்கள் தாய்ப்பால் குடிக்கும் அளவும் குறைந்து விடும். இருப்பினும், குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை தாய்ப்பால் குடிக்கலாம் என WHO வழிகாட்டுதல்கள் கூறுகிறது. அதனால் தாய்ப்பாலை கொடுப்பதை சற்று காலத்திற்கு நீட்டித்தாலும், மார்பகம் பாதிப்படையாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால் எத்தனை முறை பால் கொடுக்கிறீர்களோ அந்த எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை முழுவதுமாக பிற உணவுகளை உண்ண ஆரம்பித்து விட்டால், பால் கொடுப்பதை ஒரு நாளைக்கு ஒரு முறை என குறைத்திடுங்கள். குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது இதனை முழுமையாக நிறுத்திடுங்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகங்களை தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்

இதனை சரியாக செய்ய வேண்டும். முதுகிற்கு சரியான ஆதரவோடு, உங்களுக்கு தோதான இடத்தில் அமர்ந்து கொள்ளவும். இடதுபுற மார்பில் இருந்து பால் கொடுக்க வேண்டுமானால், உங்கள் இடது கைகளின் வளைவில் உங்கள் குழந்தையின் தலையை வைத்திடுங்கள். இதனால் அது இடது மார்பில் இருந்து பாலை குடிக்கும். உங்கள் குழந்தையின் சிறிய உடல் மொத்தத்தையும் உங்கள் கையால் தாங்குங்கள். பின் உங்கள் வலது கையால் உங்கள் இடது மார்பை சற்று தூக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் குழந்தை திருப்தியாக பால் குடிக்கும் போது, மார்பக திசுக்கள் தொய்வடையாமல் இருக்கும்.

மார்பகத்தை நிமிர்த்தி வைத்தல் (மாஸ்டோபெக்சி)

“தொய்வடைந்த மற்றும் தொங்கும் மார்பகங்களை கொண்டுள்ள பெண்கள், இந்த வழிமுறையை தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு பின்பற்றினால் நல்ல பயனை அடைவார்கள். இந்த முறைப்படி, மார்பகங்களில் உள்ள கூடுதல் கொழுப்பு திசுக்கள் நீங்கும். இது மார்பகங்களை இறுக்கமாக்கி, திடமான தோற்றத்தை தரும். மேலும் பழைய அளவை மீண்டும் பெறச் செய்யும்.” என வல்லுனர்கள் கூறுகின்றனர். இதுப்போக, பால் சுரக்கும் போது பெரிதாகும் காம்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் அளவையும் இது குறைக்கும்.

மாற்று மார்பகங்கள்

சில சூழ்நிலைகளில், சூடாப்டோசிஸ் என அழைக்கப்படும் நிலை ஏற்படும் போது, தாய்ப்பால் கொடுத்த பிறகு மார்பகங்களின் அளவு பெருவாரியாக குறையும். இதனால் மார்பகங்கள் பார்ப்பதற்கு காற்று அடித்ததை போல் தெரியும். அதன் மீது காம்புகள் கீழ் நோக்கியபடி அசிங்கமாக இருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்கு மார்பகங்களை தூக்கி நிமிர்த்தும் செயல்முறை ஒத்து வராது. இம்மாதிரி பெண்களுக்கு மாற்று மார்பகங்கள் பொறுத்த வேண்டி வரும்.

பொதுவாக இந்த மாற்று மார்பகம் உங்கள் மார்பக தாய்களுக்கு பின்னால் பொருத்தப்படும். இதனால் மார்பக திசுக்கள் பாதுகாப்பாக இருக்கும். அப்படியானால் இன்னொரு குழந்தை பிறந்தாலும் கூட அவர்களால் தாய்ப்பால் கொடுக்க முடியும். மாற்று மார்பகம் என்பது அறுவை சிகிச்சை முறையாகும். இதில் ஜெல் வடிவில் அல்லது நீர் நிரப்பப்பட்ட ஒரு பை ஒன்றினை மார்பக தசைகளுக்குப் பின்னால் மீள்கட்டமைப்புக்காக வைத்து விடுவார்கள்.

இருப்பினும், பெண்களுக்கு கீழ்நோக்கிய படி உள்ள காம்புகளைக் கொண்ட தொங்கும் மார்பகங்கள் இருந்து, அதுவும் மடிக்கு கீழே வரை தொங்கி கொண்டிருந்து, அதனால் வடிவம் இல்லாமல் அசிங்கமாக இருந்தால், அவர்கள் மார்பகங்களைத் தூக்கி நிமிர்த்தும் செயல்முறையுடன் சேர்த்து மாற்று மார்பகங்களும் பொருத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது

கொழுப்பு நிரப்புதல் (லிப்போ ஃபில்லிங்)

ஒருவருக்கு கத்தி அல்லது அறுவை சிகிச்சை எனும் போது பயம் என்றால், கொழுப்பை நிரப்பும் முறையை (லிப்போ ஃபில்லிங்) தேர்ந்தெடுக்கலாம். இதன் படி கொழுப்பு திசுக்களை ஊசி போட்டு மார்பகங்களில் ஏற்றி, மார்பகங்களை திடமாக்குவார்கள்.

அறுவை சிகிச்சை?

* அறுவை சிகிச்சைக்கு பின் உங்கள் மார்பகங்கள் மீண்டும் அதே வடிவத்திலும் அளவிலும் கண்டிப்பாக இருக்காது.

* அறுவை சிகிச்சை முடிந்த கொஞ்ச நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

* குழந்தை தாய்ப்பால் குடியை மறந்த பிறகே மார்பகங்களை சீரமைக்கும் அறுவை சிகிச்சைக்கு நீங்கள் திட்டமிட வேண்டும்.

Related posts

உங்களுக்கு மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா? கட்டாயம் இதை படியுங்கள்….

nathan

நீர்ச்சத்து குறைவும்… பாத வெடிப்பும்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?

nathan

கர்ப்பகாலத்தில் பயணம் செய்வது கருச்சிதைவை ஏற்படுத்துமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! தோல் பிரச்சனைகளைப் போக்கும் துளசி

nathan

நீங்கள் 40வயசுக்கு மேல வர்ற பிரச்சனையை தவிர்க்க இப்பயிருந்தே இத சாப்டுங்க!

nathan

நின்று கொண்டே வேலை செய்வதால் ஏற்படும் வேதனை

nathan

பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க வேண்டும்

nathan

பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது?

nathan