கண்கள் பராமரிப்பு

கருவளையம் மறைய வழி

கண்களைச் சுற்றி கருவளையங்கள் இருப்பது, உங்களை எப்போதும் சோர்வானவராகவும், இயலாதவராகவும் காண்பிக்கிறது. உங்கள் கண்கள் தன்னை கவனிக்கும்படி சொல்வதற்கு, இதுவும் ஒரு வழியாகும்.

எனவே ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய, உணவை புதிய காய்கறிகள் மற்றும் பழங்களுடன் செறிவூட்டுவதுடன், கருவளையங்களை போக்க இயற்கையான தீர்வுகளையும் முயற்சி செய்யலாம். உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிரச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன.

உருளைக்கிழங்கு துண்டு: ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை எடுத்து, அதை நன்றாக குழாய் நீரில் கழுவவும். அதன் தோலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், தோலை உறிக்காதீர்கள். இப்போது உருளைக் கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும்.

அதில் ஒரு துண்டை, 3-4 அங்குல துண்டுகளாக வெட்டுங்கள். இந்த துண்டுகளை பிரிஜ்ஜில், 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின் உங்கள் கண்களின் மேல், 5 நிமிடங்களுக்கு அந்த துண்டுகளை வைத்திருங்கள். சிறந்த பலன் பெற தொடர்ந்து, 10 நாட்களுக்கு செய்யுங்கள்.

கருவளையங்களிலிருந்து விடுபட மேலும் குறிப்புகள் கீழே:

உருளைக்கிழங்கு சாறு: வீட்டில் பிரிஜ் இல்லையெனில், உருளைக் கிழங்கு சாற்றையும் உபயோகிக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சிறிய அளவுள்ள உருளையை துருவி, அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதை பிழிந்து சாறு எடுக்கவும்.
ஒரு பருத்தி பஞ்சின் உதவியுடன், இந்த சாற்றை உங்கள் கண்களைச் சுற்றி தடவுங்கள். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
இதை படுப்பதற்கு முன் வழக்கமாக செய்து வந்தால், கருவளையங்களை வெளிற வைத்து விடும். ஆலிவ் எண்ணெய், தோலை இறுக்கமாக வைக்கவும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
946428 128390157366867 646056154 n 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button