முகப் பராமரிப்பு

வீட்டில் இருந்தபடியே முகம் பொலிவு பெற வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்…

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் அனைவரின் மத்தியில் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “யார் தன்னை தானே முதலில் அழகென உணர்கிறார்களோ, அவர்களே விரைவில் வெற்றிப் பெறுகின்றனர்”.

இயற்கையாகவே தூக்கமின்மை, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைப்பாடு போன்றவை நமது சருமத்தின் நிலையை மாறுபட செய்யும். சரி அதில் எல்லாம் நாம் சரியாக இருந்து, எவ்வளவுதான் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியில் சென்றாலும் வெயில், நச்சுக்காற்று, புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் போன்றவை நமது சருமத்தின் தன்மையை சீரழித்து விடுகின்றன. இதிலிருந்து நம் சருமத்தை வீட்டில் இருந்தபடியே எப்படி காப்பது என தெரிந்துக் கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்…

வெள்ளரி மற்றும் எலுமிச்சை

வீட்டில் இருந்தபடியே உங்களது சருமத்தை பொலிவடைய செய்ய எலுமிச்சையும், வெள்ளரியும் ஓர் சிறந்த சேர்க்கை ஆகும். எலுமிச்சையில் இருக்கும் சிறந்த மூலப்பொருட்கள் உங்களது சருமத்தை தெளிவுற உதவுகிறது மற்றும் அதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உங்களது சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. பின்பு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. நீங்கள் எலுமிச்சை சாற்றை உங்களது முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து இதமான நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பொலிவடையும் மற்றும் சிறுது நேரம் நறுக்கிய வெள்ளரியை துண்டுகளை உங்களது முகத்தில் வைத்து எடுப்பதினால், உங்களது சருமம் மிருதுவாக மாறும். இதனை தினசரி செய்துவந்தால் முகம் விரைவில் பொலிவடையும்.

எலுமிச்சை சாறு

சருமத்தை எப்படி இயற்கையாக பொலிவடைய செய்ய முடியும்? எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின் இதமான நீரில் முகம் கழுவினால் உங்களது முகம் தானாகவே பொலிவடையும்.

மஞ்சள்

மஞ்சள் இயற்கையிலேயே கிருமிநாசினியாக பயன் தருகிறது. மஞ்சளை தினம்தோறும் குளிக்கும் போது முகம் கழுவ உபயோகிப்பதால் சருமம் சார்ந்த பிரச்சனைகளோ அல்லது நோய்களோ எளிதில் அண்டாது. மற்றும் மஞ்சளில் இருக்கும் நற்குணங்கள் உங்களது சருமத்தை பிரகாசிக்க வைக்கும். வாரம் இருமுறையாவது மஞ்சள் தேய்த்து குளிப்பது சருமத்திற்கு நன்மை விளைவிக்கும்.

கடலை மாவு

கடலை மாவுடன் மஞ்சள் அல்லது கடலை மாவுடன் சிறிது அளவு பால் மற்றும் நீர் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின்பு இதமான நீரில் முகம் கழுவுங்கள். அதன் பின்பு சுழற்சி முறையில் உங்களது முகத்தை நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உங்களது முகம் பிரகாசம் அடையும்.

தேன் மற்றும் பன்னீர்

சருமம் மிருதுவாக இருக்க வேண்டுமெனில் சருமத்தின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். தேனில் உள்ள நற்குணங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது மற்றும் தேனில் உள்ள ஆன்டி-பயோடிக் தொற்று கிருமிகளிடம் இருந்து உங்களது சருமத்தைக் காத்திட உதவுகிறது. தினந்தோறும் காலை தேன் மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் உபயோகப்படுத்தினால், முகம் பொலிவடையும்.

கற்றாழை

வீட்டில் இருந்தபடியே முகம் பொலிவடைய தீர்வு காண கற்றாழை ஓர் சிறந்த மருந்தாகும். கற்றாழையில் சருமத்திற்கான பயன்கள் மிகுதியாக இருந்கின்றன. கற்றாழை ஓர் சிறந்த பூச்சிக்கொல்லி இது முகத்தில் தோற்றும் கிருமிகளை முழுமையாக அழிக்க உதவுகிறது. முகப்பரு நீங்க, சருமம் பிரகாசிக்க, தோல் மென்மையடைய என பல பயன்களை அளிக்கிறது கற்றாழை.

தயிர் மற்றும் முட்டை

இது இயற்கை முறையில் முகம் பொலிவடைய நம்மில் பலரும் அறிந்த முறையே ஆகும். தயிரில் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் மாஸ்க் போல உபயோகப்படுத்த வேண்டும். பின்பு 15 நிமிடம் கழித்து இதமான நீரில் முகம் கழுவ வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குகிறது. மற்றும் இதில் உள்ள புரதம் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

ஓட்ஸ் மற்றும் தயிர்

ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button