28.6 C
Chennai
Monday, May 20, 2024
625.500.560.350.160.300.053.800.90 15
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

கிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இது நல்லதா அல்லது கெட்டதா என்பது தெரியாமலே பலகாலமாக நாம் இதனை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்றும் நம்மில் இருக்கும் ஒரு கேள்வி ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா என்பதுதான்?

இதற்கான விடை என்னவெனில் உபயோகிக்க கூடாது என்பதுதான். ஏனெனில் இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மேலும் சிலமுறைகள் பயன்படுத்தலாம். ஆனால் அது எண்ணெய் மற்றும் சமைக்கப்படும் உணவை பொறுத்தது. இதனை பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வறுக்கும்போது என்ன ஆகிறது?

எந்த உணவாக இருந்தாலும் அதனை அதிகம் வறுக்கும்போது, அது உணவை சிதைவடைய செய்து அதில் உள்ள புரோட்டின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சிதைக்கிறது, அதனால்தான் உணவு சிவந்து விடுகிறது. ஊட்டச்சத்துக்கள் சிதைவடைந்த இந்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கும்போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கலாம். இப்படி அதே எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது ஆர்தோகுளோரோசிஸ் என்னும் நோயை உண்டாக்குகிறது. இதனால் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிக்கிறது.

எண்ணெயின் வகை மற்றும் வெப்பநிலை

எண்ணெயின் மறுபயன்பாடு என்பது அதன் தன்மை மற்றும் அது சூடுபடுத்தப்படும் வெப்பநிலையை பொறுத்து அமைகிறது. ஊட்டசத்து நிபுணர்களின் கருத்துப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தலாம், ஆனால் ஆலிவ் எண்ணெய் , எள் எண்ணெய் போன்றவற்றை அதிக வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதை தவிர்க்கவும்.

உபயோகிக்கும் பாத்திரம்

உங்களுக்கு தெரியுமா? வீட்டில் உபயோகப்படுத்தும் எண்ணெய் கடைகளில் உபயோகப்படுத்தும் எண்ணெயை விட விரைவில் கெட்டுவிடும். இதற்கு காரணம் கடைகளில் செய்யப்படும் வெப்ப ஏற்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் பாத்திரங்கள்தான். வீட்டில் வறுக்கும்போது உணவுத்துகள்கள் பாத்திரத்தின் அடியில் சென்று சென்றுவிடும், ஆனால் கடைகளில் செய்யப்பட்டுள்ள அமைப்புகளில் இவ்வாறு நடக்காது. இவ்வாறு எண்ணெயில் உணவு துகள்கள் அதனை விரைவில் அதன் மூலக்கூறுகளை சிதைக்கும்.

எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா? கூடாதா?

ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின்படி உணவுத்துகள்களை வடிகட்டி கொண்டு நன்கு வடிகட்டிய பின்தான் அதனை உபயோகிக்க வேண்டும். அதேசமயம் அதனை அதிக வெப்பநிலையில் உபயோகித்திருக்க கூடாது என்பதையும் உறுதிசெய்துகொள்ளவும். உபயோகித்த எண்ணெயை நன்கு மூடிய பாத்திரத்தில் சேமிக்கவும். ஒருவேளை சேமிக்கப்பட்ட எண்ணெய் அடர் நிறத்திற்கோ, தடிமனாகவோ அல்லது வழவழப்பாகவோ மாறினால் அந்த எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள். உணவு துகள்களுடன் திறந்து வைக்கப்பட்டிருந்த எண்ணெயை எக்காரணத்தை கொண்டும் மீண்டும் உபயோகிக்காதீர்கள்.

பாதிப்புகள்

இந்த வழிமுறிகளை பின்பற்றாமல் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பது பல ஆரோக்கிய கோளாறுகளை உண்டாக்கும். இந்த எண்ணெய்களில் வழக்கமான எண்ணெயை விட அதிகளவு கொழுப்பு இருக்கும். மேலும் இதில் உள்ள உணவுத்துகள்கள் எண்ணையை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றிவிடும். இந்த எண்ணெயை உபயோகிக்கும்போது அது குடல் புற்றுநோய், உயர் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

Related posts

சுவையான! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?

nathan

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்

nathan

நின்னுக்கிட்டே சாப்பிட்டா என்னென்ன ஆபத்து! மோசமான குறைபாட்டை சந்திக்கலாம்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

பஜ்ஜி, போண்டா, கெ.எப்.சி, சிக்கன் 65 அதிகமா சாப்பிட பிடிக்குமா? அப்ப நீங்க இதப் படிச்சே ஆகணும்!

nathan

இதோ நுரையீரல் தொற்றை தடுக்கும் சூப்பர் உணவுகள்! இத படிங்க

nathan

சத்து மாவு உருண்டை

nathan

தெரிஞ்சிக்கங்க…தப்பித் தவறிகூட இந்த காய்கறிகளை இரவு நேரத்தில் சாப்பிடாதீங்க?

nathan