​பொதுவானவை

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் – 15
பெரியவெங்காயம் – 2
பெரிய தக்காளி – 2
பூண்டு – 6 பல்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தானியத்தூள்-1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
சாம்பார்பொடி-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-சிறிது
சீரகம் – 1டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை-25
வறுத்த எள்- 2 டீஸ்பூன்
வெல்லம்- 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 1 குழிகரண்டி

பேஸ்டாக அரைக்க:
தக்காளி, பெரியவெங்காயம், பூண்டு, வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை, வறுத்த எள்.

பேஸ்டாக கொடுத்தவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
கத்திரிக்காயைக் கழுவி அடிப்பாகம் வரை நான்காக கீறி விட்டுக் முழு கத்திரிக்காயை வைத்து கொள்ளவும். தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்த்த உடன் அந்த கத்திரிக்காயை எண்ணையில் சிறிது நேரம் வறுக்கவும், கத்திரிக்காய் கலர் மாறிய உடன் எடுத்து தனியாக வைத்து விடவும் .

பின் அதே எண்ணையில் சீரகம் , மிளகு போட்டு வெடித்த உடன் , அரைத்து வைத்து உள்ள மசாலாவை போட்டு அதன் உடன் மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், சாம்பார்பொடி, தானியத்தூள் போட்டு வதக்கவும் பின் அதன் உடன் புளி தண்ணிர் உப்பு போட்டு,வறுத்து வைத்து உள்ள கத்திரிக்காயைச் சேர்த்து மெதுவாக புரட்டி விடவும்.

தீயை மிதமாக வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேக விடவும். எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் வரை வேக விடலாம் ,இடையில் எண்ணெய் தேவை என்றால் சிறிது சேர்த்து கொள்ளலாம்.பின் வெல்லம் சேர்த்து .நன்றாக கலந்து கத்திரிக்காய் உடையாமல் புரட்டி வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
இது ஒரு முஸ்லிம் சமுகத்தில் செய்யப்படும் உணவு வகை.நான் என் தோழி வீட்டுக்கு போகும் போது பிரியாணி உடன் இதை தருவார்கள்.முதல் முறை சாப்பிடும்போது இது என்ன காம்பினேசன் என்று நின்னைத்தேன்.

சாப்பிட பின் எனக்கு பிரியாணி விட இந்த தொக்கு பிடித்து விட்டது.அவர்களிடம் கற்று கொண்டது இது.

இந்த டிஷ் நம் பருப்பு சாதம்,இல்லை என்றால் இதையே சாதத்துடன் பிசைந்து சாப்பிட கார சாரமாக இருக்கும்.

இது செய்த உடன் சாப்பிடுவதை விட அடுத்த நாள் சாப்பிட நன்றாக இருக்கும்.

இதில் வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை, வறுத்த எள்
நான் சொன்ன அளவு போட வேண்டும்.அதிகம் ஆனால் taste மாறி விடும்.

சீரகம் , மிளகு போட்டு தாளிப்பது சாப்பிடும் போது பல்லில் கடி படும் போது நன்றாக இருக்கும்.ஒரு சிலர் சீரகம் , மிளகுக்கு பதிலாக பட்டை ,கிராம்பு,ஏலக்காய் ,பிரியாணி இலை போட்டு தாளிப்பார்கலாம்.
%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D %E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button