26.2 C
Chennai
Friday, Dec 27, 2024
1 1517980
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! படிங்க இத…

என்ன தான் நாம் கடினமாக உழைக்க தயாராக இருந்தாலும் ஜாதக மற்றும் கிரக நிலையின் படி பல்வேறு இடைஞ்சல்கள் நமக்கு வந்து சேரும் .ஜாதகத்தில் இருக்கிற யோகங்களால் தான் அந்த பலன்கள் அமைந்திருக்கும்

அதுவும் குறிப்பிட்ட யோகங்கள் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரக்கூடும். அந்த யோகத்தில் செய்தால் மட்டுமே அதற்கான முழு பலன் கிடைக்கும். ஒருவனுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனக்கு மட்டும் ஏன் அப்படியில்லை நான் மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று புலம்புவராக இருந்தால் ஒன்றை நீங்கள் கவனிக்க மறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதாவது உங்கள் ராசிப்படி உங்களுக்கு இருக்கக்கூடிய யோகங்களை பயன்படுத்திக் கொள்ள தவறவிட்டுவிட்டீர்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 300க்கும் மேற்பட்ட யோகங்கள் இருக்கின்றன. இவற்றில் எதாவது ஒன்று உங்களது ஜாதகத்தில் இருக்கும். அவற்றை உரிய காலத்தில் கண்டுபிடித்து பயன்படுத்திக் கொண்டால் அது உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதில் நிச்சயம் உங்களுக்கு வெற்றி தான்.

யோகம் :

ஜாதகத்தில் ஒரு கிரஹகத்திற்கு மற்றொரு கிரஹத்திற்கும் உள்ள தொடர்பினைத்தான் யோகம் என்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கிரக நிலைகள் இருந்தாலும் அவருக்கு இருக்கக்கூடிய யோகங்கள்,படி நிலைகள் ,கிரக சேர்க்கை மூலமாகத்தான் உங்களுடைய வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.

மகுட யோகம் :

ஜாதகத்தில் குரு லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில் குரு அமர்ந்து அதே இடத்தில் ஒரு நல்ல கிரகம் சனி லக்னத்திற்கு பத்தில் அமர்ந்தால் அதற்கு மகுட யோகம் என்று பெயர். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் அதிகார தோரணையுடன் இருப்பார்கள். சமுதாயத்தில் தனக்கென ஓர் இடத்தை நிலைத்து பிடித்து நீடிப்பவராக இருப்பர்.

கோ யோகம் :

குரு தனது மூலதிரி கோணத்திலும் இரண்டாம் அதிபதி குருவுடன் இணைந்து லக்கினம் உச்சம் பெற்றிருந்தால் அதற்கு கோ யோகம் என்று பெயர். இவர்களுக்கு செல்வத்திற்கு பஞ்சமிருக்காது.

பணமும் கல்வியும் இவர்களிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கும். அனைவராலும் மதிக்கக்கூடிய இடத்தில் இருப்பர்.

விமல யோகம் :

12 ஆம் இடத்தின் அதிபதி அதே இடத்தின் ஆட்சியாக அமையப் பெற்றால் அதற்கு விமல யோகம் என்று பெயர்.இந்த யோகம் அமையப் பெற்றிருந்தால் சிக்கனமாக இருப்பர். அதே சமயம் அமைதியானவராகவும் எதையும் நிதானத்துடன் அணுகக்கூடியவர்களாகவும் இருப்பர்.

புஷ்கலா யோகம் :

உங்கள் லக்கினத்தின் அதிபதி சந்திரனுடன் இணைந்து கேந்திர திரிகோணத்திலோ அல்லது சந்திரணின் நட்பு வீட்டிலிருந்து ராசி லக்கினத்தில் அமர்ந்திருக்கும் கிரகத்தை பார்த்தால் அது புஷ்கலா யோகம்.

இந்த யோகம் அமைந்திருந்தால் இவர்கள் சமுதாயத்தில் பெரும் அந்தஸ்த்துடன் இருப்பார்கள்.பிறர் மதிக்கக்கூடிய, போற்றக்கூடிய உயர் ஸ்தானத்தில் இவரது இடம் இருக்கும்.

விபரீத ராஜயோகம் :

துர்ஸ்தானாதிபதிகள் என்று சொல்லப்படக்கூடிய 3,6,8,12 ஆகிய இடங்களின் அதிபதிகள் அவர்கள் இடங்களுக்குள்ளேயே இடம் மாறியிருந்தால் அதனை விபரீத ராஜயோகம் என்று அழைக்கிறார்கள்.

இதில் எல்லா இடங்களிலும் அதாவது துர்ஸ்தானாதிபதிகள் நான்குமே இடம் மாறியிருக்க வேண்டும் என்று அவசியமல்ல இரண்டு அல்லது மூன்று இடங்கள் மாறியிருந்தால் கூட அது விபரீத ராஜயோகம் தான். இவர்களுக்கு திடீர் நல்ல பலன்கள் உண்டென்றாலும் எல்லாமே திடீரென்று தான் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக கிடைத்திடும்.

வாகன யோகம் :

நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்திருந்தால் அவருக்கு வாகன யோகம் இருக்கிறதென்று அர்த்தம். சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .

இதில் சுக்கிரன் நான்காம் இடத்தில் அதிபதியாக பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருந்தால் வாகனங்கள் தொடர்பான தொழிலையே எடுத்துக் கொண்டு செய்வர். சுக்கிரன் சந்திரனோஅடு சேர்ந்து இருப்பது அலது ஐந்து மற்றும் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருந்தால் நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.

மஹா சக்தி யோகம் :

பேரும் புகழும் கிடைக்கச் செய்வது மஹா சக்தி யோகங்கள் தான். சந்திரனுக்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராகு நிற்ப்பது மஹா சக்தி யோகமாகும். இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் சேர்ந்திருந்தால் அவர்கள் நிச்சயம் கோடீஸ்வரர்களாக இருப்பர்.

இவர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உடையவராகவும், பேச்சாற்றல் உடையவராகவும் இருப்பர்.

பர்வத யோகம் :

சுபகிரகங்கள் மற்றும் யோக அதிபதிகள் தவறாமல் 1,4,7,10 ஆகிய இடங்களில் அமர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் லக்கின அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரம் பெற்று அமர்ந்திருக்க வேண்டும். அப்படி அமர்ந்திருந்தால் இவர்களுக்கு பர்வத யோகம் இருக்கிறது என்று அர்த்தம். ஜாதகத்தில் மற்ற யோக நிலைகளைப் பொறுத்து பர்வத யோகம் இன்னும் பலப்படும்.

இவர்கள் பெரும்பாலும் வசதியான வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.

குரு சந்திர யோகம் :

குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்பார்கள். குருவும் சந்திரனும் எந்த வீட்டில் இருந்தாலும் அது குரு சந்திர யோகம் எனப்படும். இந்த யோகம் இருப்பவர்கள் எப்போதும் தீர்க்கமான சிந்தனைகள் உடையவர்களாக இருப்பர், பிறரை விட இவர்களுக்கு தாய்ப்பாசம் அதிகம்.

இவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அதில் சிறப்பான செயல்களை செய்து முன்னிலையில் இருப்பர்.

அஷ்ட லட்சுமி யோகம் :

ஒரு ஜாதகத்தில் லக்கினத்தின் ஆறாம் இடத்தில் ராகுவும், குரு கேந்திரம் 1,4,7 மற்றும் 10 ஆம் இடத்தில் இடம் பெற்றிருந்தால் அதனை அஷ்டலட்சுமி யோகம் என்பார்கள். இவர்கள் எளிதாக வெற்றியடைவது போல,நல்ல நிலையை அடைவது போலத் தெரிந்திடும். இவர்கள் இன்னும் சற்று உழைத்தால் சாதனையாளர்களாக ஜொலிக்கலாம்.

பட்டதாரி யோகம் :

உங்களின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் புதன் இணைந்திருந்தால் அதனை புதாஅதித்ய யோகம் என்று வழங்கப்படுகிறது. இதனை பட்டதாரி யோகம் என்றும் அழைக்கிறார்கள். இந்த அமைப்பிற்கு குருவின் சேர்க்கை,பார்வை மூலமாக சிறப்பான சம்பந்தம் இருந்தால் கல்வியில் மிகச்சிறந்த இடத்தை பிடிப்பார்கள்.

குரு சண்டாள யோகம் :

குருவுடன் சேர்ந்து ராகு நிற்கின்ற ஜாதகத்திற்கு குரு சண்டாள யோகம் என்று சொல்வார்கள். இந்த ஜாதகத்தில் குருவோ அல்லது ராகுவோ உச்சம் பெற்றால் அவர்களுக்கு அதீத யோகம் இருக்கும்.

இதில் ராகுவோ அல்லது குருவோ பகை,நீசம் பெற்றுவிட்டால் யோகம் கெட்டுவிடும். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது.

அதி யோகம் :

ஜாதகத்தில் புதன்,குரு,சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் அமைந்திருந்தால் அதனை அதி யோகம் என்று சொல்கிறார்கள்.

இவர்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கும், எப்போதும் அமைதியானவர்களாகவும், எல்லாரிடத்தில் நட்பு பாராட்டுபவர்களாகவும் இருப்பார்கள்.

கோடீஸ்வர யோகம் :

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் 4,9 ஆகிய இடங்களில் குரு நின்று இரண்டாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் ஏழாம் இடத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகிடும் வாய்ப்புண்டு.

இதைத் தவிர பிறருக்க்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் ஆட்சி உச்சம் பெற்று அவர்கள் லக்கின அதிபதிக்கும், ராசி நாதனுக்கும் வேண்டியவர்களாக அமைந்திருந்தால் கோடீஸ்வரராகும் யோகம் உருவாகும்.

பானு யோகம் :

1,4,5,7,9 மற்றும் 10 இப்படி இந்த ஆறு இடங்களிலும் நவ நாயகர்கள் வீற்றிருந்தால் அந்த அமைப்பிற்கு பானு யோகம் என்று பெயர். இவர்கள் எப்போதும் அதிஷ்டசாலிகளாக இருப்பர்.

வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் நிலைத்திருக்கும்.

Related posts

பெற்றோர் சண்டையிடும்போது உங்கள் குழந்தைகளுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை

nathan

அதிர்ச்சி தரும் ஆய்வு… `பெண்களே… குறட்டையில் வேண்டாம் உதாசீனம்!’

nathan

ஹை-ஹீல்ஸ் ஆபத்து

nathan

30 வயதுகளில் இருக்கும் பெண்கள் எடையை வேகமாக குறைக்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… கொளுத்தும் வெயில்.. வீட்டை குளிர்ச்சியுடன் எப்படி வைத்து கொள்ளலாம்?

nathan

பற்களுக்கு பின் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

கொழுப்பை குறைக்கும் வெந்நீர்

nathan

வெளியே செல்லும் முன் செய்யக்கூடிய எந்தெந்த செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று பார்க்கலாம் வாங்க!…

sangika