ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

கொழுப்பை குறைக்க தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்

நாம் அனைவரும் இந்த ஆலோசனையை எண்ணற்ற முறையில் கேட்டிருப்போம். தினமும் எட்டு முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிக்கவும். நிபுணர்கள் “நீங்கள் எடை அதிகமாவதற்கான காரணம், பதப்படுத்தப்பட்ட மற்றும் உப்பு அதிகமுள்ள உணவினால் உங்கள் கலோரிகள் அதிகமாக முனைகின்றன, எனவே எட்டு முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் அருந்துவது உண்மையில் நீங்கள் உங்கள் எடையை குறைக்க உதவுகிறது” என்று சொல்கிறார்கள்.

20090324_10f78

தண்ணீர் உங்கள் பிஎம்ஐ குறைக்கிறது. நீங்கள் தினமும் எட்டு முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பதால், நீங்கள் குறைவாக சாப்பிடுவதோடு மற்றும் குறைவான கலோரி அளவுடைய பானங்களையே குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. உணவு உண்ணும் முன் 500 மில்லி தண்ணீர் குடிப்பது கலோரிகளை குறைக்கவும், எடை இழக்கவும் மற்றும் இதன் விளைவாக குறைந்த உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) பெற முடியும். த‌ண்ணீர் கொழுப்பை எரிக்க‌ உதவுகிறது. நீங்கள் ஒரு உயர் கலோரி பானங்கள் குடிப்பதை ஒப்பிடுகையில் தண்ணீர் அதிகம் குடித்தால் 50 சதவிகிதம் அதிகமாக‌ கொழுப்பை எரிக்க முடியும்.

நீங்கள் விளையாட தண்ணீரானது சிறப்பாக உதவுகிறது. உங்கள் உடலின் குறைவான நீர் உள்ளடக்கம் இரண்டு சதவீதம் மட்டும் இருப்ப்தாலும், வியர்வை அதிகமாக‌ வெளியேறுவதாலும் ஒரு பெரிய அளவிற்கு விளையாட்டு செயல்திறனை இது பாதிக்கும். எனவே போதுமான தண்ணீர் பருகுவது உங்கள் விளையாட்டை மேம்படுத்தவும் மற்றும் வறட்சி ஆபத்திலிருந்தும் காப்பாறறும்.

தண்ணீர் த‌லைசுற்றினை தவிர்க்கிறது அல்லது எதிர்த்து போராடுகிறது: ஒரு இரவு விருந்துக்கு பிறகு ஏற்படும் ஒரு மாதிரியான சங்கடமான உணர்வுகளில் இருந்து மீள, எப்போதும் இந்த மாதிரியான தருணங்களில் விருந்துக்கு போகும் ஒரு மணி நேரம் முன்பே சில டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஒரு நீண்ட தூரம் விமானம் பயணம் மேற்கொள்ளும் போது, நீரேற்றத்தோடு இருப்பது நல்லது. இது தலைசுற்றலை தவிர்க்க உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button