மருத்துவ குறிப்பு

நல்ல கொழுப்பை பெருக்கும் இளநீர்

இளநீர் உடல் சூட்டை தணிக்க உதவும், இயற்கை பானம் என்பது, அனைவருக்கும் தெரியும்.

இளநீரின் ஏராளமான பிற பயன்களை, நாம் அனைவரும் அறிந்திருக்க மாட்டோம். அதை தெரிந்து கொள்ளுங்கள்:

நாள்தோறும் ஒரு இளநீர் அருந்த வேண்டும். கோடை காலத்தில் நிறைய இளநீர் அருந்த வேண்டும். இது, சூட்டை தணிப்பதற்கு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்துகளை முழுவதுமாக இயங்க செய்வதற்கும், புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறது.

உடற்பயிற்சி செய்பவர்கள் இளநீர் அருந்துவதை, அன்றாட பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இளநீர் குடிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. உடலின் நீர்சத்தை குறிப்பிட்ட அளவில் வைத்து கொள்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், தோல் சுருக்கம் அடைபவர்கள், தினமும் இளநீர் அருந்துவது நல்ல தீர்வாகும். உடலை வலுவாக்க செய்கிறது. இளநீரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் மிகுதியாக உள்ளன. இதனால், ரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான பிரச்னைகள் வரவிடாமல் தவிர்க்கிறது. தவிர, ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும் இளநீர் உதவுகிறது.

உடலின் நல்ல கொழுப்பை அதிகரித்து, உடல் இயக்கத்தை சீர் செய்கிறது.
பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. கால்சியம், ஜின்க் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதால், உணவை செரிமானம் செய்வதுடன், அஜீரண கோளாறுகளையும் குணப்படுத்துகிறது. வைட்டமின் பி இதில் இருப்பதால், வாய்ப்புண் மற்றும் மற்றும் உடல் சூட்டினால் ஏற்படும் புண்களையும் நீக்குகிறது. தசை பிடிப்புகளுக்கும், இளநீர் நல்ல தீர்வாக உள்ளது. எலும்புகளை வலுப்பெற செய்கிறது.

அடிக்கடி வியர்வை ஏற்படுவதால், சிலருக்கு ரத்த அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இளநீர் இப்பிரச்னையையும் கட்டுப்படுத்துகிறது. சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக உடல் எடை இருப்பவர்கள், தினசரி இளநீர் அருந்தி வந்தால், விரைவில் எடை குறையும். இத்தகைய பல பயன்களை கொண்ட இளநீரை, வாரத்துக்கு இருமுறையாவது அருந்தினால், பல்வேறு நோய் தாக்குதல்களில் இருந்து, உடலை பாதுகாக்கலாம்.

இளநீர் குடிக்கும் பலர், தண்ணீரை மட்டும் குடித்து விட்டு உள்ளே இருக்கும் இளசான தேங்காயை அப்படியே விட்டு விடுகின்றனர். தண்ணீருக்கு இணையான சத்து, இந்த இளம் தேங்காயிலும் உள்ளது. பலர் இந்த தேங்காய் பருப்பை சாப்பிடுவது, கொழுப்பை வரவழைத்து விடும் என நினைக்கின்றனர். இது தவறு.

தேங்காய் பருப்பை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது, உடலுக்கு ரொம்பவும் நல்லது. குறிப்பாக, ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்க இது உதவுகிறது. இனி இளநீரை கண்டால் விடுவீர்களா?
%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button