29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
88739f4c db4c 483a bcdf 3e0d4698bcba S secvpf
மருத்துவ குறிப்பு

ஆஸ்துமாவை குணமாக்கும் கிராம்பு

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

1. பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.

2. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.

3. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

4. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

5. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

6. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

7. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்
88739f4c db4c 483a bcdf 3e0d4698bcba S secvpf

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத மசாலா பொருட்கள்!!!

nathan

பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில வழிமுறைகள்

nathan

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்

nathan

சுவாச நோய்க்கான சித்த மருந்துகள்

nathan

தினமும் பல மணிநேரம் சூயிங் கம் மென்ற பெண்ணின் அவல நிலை!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கற்றாழையின் அரிய வைத்திய முறைகள்?

nathan

நீங்கள் தினமும் அதிகம் சாப்பிட கூடாத 5 உணவுகள்!அவசியம் படிக்க..

nathan

பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள்!

nathan

இதை பின்பற்றுங்கள்! மூளையின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க வேண்டுமா?..

nathan