தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி செரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பல்வேறு பயன்கள்

வறண்ட தலை முடியால் அவதிப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தாவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உங்கள் தலை முடியின் நிலையை எண்ணி கலங்க வேண்டாம். உங்களுக்கு கைக் கொடுக்க உதவுகிறது தலை முடி செரம். தலை முடி செரத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் சில உடல்நல பயன்களை பற்றி பார்க்கலாமா?

– மந்தமாக இருக்கும் முடிக்கு உடனடியாக மிளிர்வை அளிக்கும்: கூந்தல் சிக்கல்களை நீக்குவதோடு மட்டுமல்லாது மந்தமான உங்கள் கூந்தலை உடனடியாக மிளிர வைக்கவும் செய்யும் செரம்.

– அடங்காமல் இருக்கும் கூந்தலை பராமரிக்க உதவும்: சுருண்ட முடிக்கு இதமளித்து கூந்தலை நொடிப்பொழுதில் மென்மையாக்கி, பராமரிக்கும் வகையில் மாற்றும்.

– கூந்தல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்: சில கூந்தல் செரம்கள் புறஊதா கதிர்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும். தொடர்ச்சியாக சூரிய ஒளியில் தென்படும் போது அது உங்கள் கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்கும். அதனால் அவ்வகையான கூந்தல் செரம்களை பயன்படுத்தினால், சூரிய ஒளியால் ஏற்புடம் பாதிப்பில் இருந்து அது உங்கள் கூந்தலை பாதுகாக்கும்.

– கூந்தலை ஸ்டைல் செய்வதற்கு உதவும்: ஸ்டைல் செய்வதற்கு முன்பு முடியை வாரவோ அல்லது சிக்கலை எடுக்கவோ கஷ்டமாக இருந்தால், ஒரு நாணய அளவிலான முடி செரத்தை எடுத்துக் கொண்டு தலையில் தடவினால், மாயங்கள் நிகழும்.

 

Related posts

முடி அடர்த்தியாக வளர…. இய‌ற்கை வைத்தியம்,

nathan

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan

சுருட்டை முடியை பராமரிக்க சில சூப்பர் டிப்ஸ்….!

nathan