சைவம்

பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ்

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 1 கப்

பீட்ரூட் – 2

2 பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை

வெங்காயம் – 1

ப.மிளகாய் – 3

இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தயிர் – 2 ஸ்பூன்

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

தனியா தூள் – அரை ஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

நெய் – 2 ஸ்பூன்

உப்பு – சுவைக்கு

எண்ணெய் – 3 ஸ்பூன்

பச்சை பட்டாணி – அரை கப்

செய்முறை:

• பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

• வெங்காயம். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• பாஸ்மதி அரிசியை கழுவி, 1 3/4 கப் நல்ல தண்ணீரில்

10 நிமிடம் ஊறவைக்கவும்

அதிக நேரம் ஊறினால் அரிசி உடைந்து விடும்.

• குக்கரில் எண்ணெய் விட்டு 2 பட்டை, கிராம்பு, பி.இலை தாளித்து நறுக்கிய வெங்காயம், 3 பச்சைமிளகாய்

சேர்த்து வதக்கவும்.

• பின் அதில் இஞ்சிபூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது வதக்கி, அடுத்து மிளகாய் தூள், தனியா தூள்

சேர்த்து, 1 நிமிடம் வதக்கி தயிர் சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்

• பிறகு ஊறவைத்த அரிசி அந்த நீருடனையே சேர்த்து, உப்பு கொத்தமல்லி தழை, நெய், பச்சை பட்டாணி

சேர்த்து சமமாக கலந்து குக்கரை மூடி, ஹையில் 1 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.

• சாதம் உடையாமல் சமமாக கலந்து விடவும்.

• சூடான பீட்ரூட் புலாவ் தயார்.

குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு தர, எளிதில் செய்ய கூடிய

சத்தான உணவு.
75f97af9 82d4 4115 805b f87218b83407 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button