32.9 C
Chennai
Monday, Apr 28, 2025
aval15c
சிற்றுண்டி வகைகள்

அவகாடோ சாண்ட்விச்

தேவையானவை:

அவகாடோ (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒன்று
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – ஒன்று
மீடியம் சைஸ் தக்காளி – ஒன்று
மிளகுத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்
பிரெட் ஸ்லைஸ் – 8
வெண்ணெய் அல்லது நெய் – டோஸ்ட் செய்ய‌

aval15c
செய்முறை:

வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அவகாடோ தோலை நீக்கி உள்ளே உள்ள சதைப்பகுதிகளைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், உப்பு, அவகாடோ, ஆலிவ் ஆயில் சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு தவாவை வைத்து, சிறிது நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அதில் பிரெட் ஸ்லைஸ்களை வைத்து இருபுறமும் கோல்டன் பிரவுன் நிறம் வரை டோஸ்ட் செய்து எடுங்கள். இரண்டு பிரெட்களுக்கு நடுவே அவகாடோ கலவையை வைத்து சாண்ட்விச்சாகப் பரிமாறுங்கள்.

Related posts

சோயா தட்டை

nathan

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்

nathan

சிறுதானிய கார குழிப்பணியாரம் செய்முறை விளக்கம்

nathan

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்

nathan

சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி

nathan

சூப்பரான ஓட்ஸ் வெஜிடேபிள் ரொட்டி

nathan

பார்லி பொங்கல்

nathan

சூப்பரான அரிசி பொரி உப்புமா

nathan